|
அறிந்து-எமக்கு உண்டாயிருக்கின்ற
இந்த நிலைமையை உணர்ந்து; ஒடுங்கி நின்று அமைதி-நீயும் வான்என நீயென இரண்டின்றி
வானே நீயாய் ஒடுங்கி அமைவாயாக இஃதே யான் வேண்டும் வரம் என்பதாம்
(வி-ம்.)
சமயக் கணக்கர்-சமயங்களை வளர்க்கும் ஆசிரியன்மார். சமயக்கணக்கர் ஒவ்வொருவரும்
கூறுவன வல்லாம் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன வன்றிப் பிற சமயத்தார்க்கும்
பொருந்தாதனவே ஆதலும் வள்ளுவர் கூறும் நெறி எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்துவனவாதலும்
பற்றிச் சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இதுவென்ற வள்ளுவன்
என்றார். வள்ளுவன் ஈண்டு ஆகுபெயராய்த் திருக்குறளைக் குறித்து நின்றது. இப்புலவர்
பெருமான் வள்ளுவரைப் பாராட்டும் இப்பாராட்டுரை நினைந்து நினைந்து இன்புறற்பாலது.
வளர்கவி: வினைத்தொகை. நோக்குந்தோறும் நோக்குந்தோறும் புதிய புதிய பொருள் தோன்றுதலால்
வளர்கவி என்றார். புலவர்-சங்கப்புலவர். திருவள்ளுவமாலையின்கண் முன்னிற்கும் அசரீரி
நாமகள் என்னும் தலைப்பையுடைய இரண்டு பாடலும் நிற்க. இறையனார் பாடலே முற்செய்யுளாதல்
உணர்க. அதுவருமாறு.
என்றும் புலரா
தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்-குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் |
என்பதாம். மாது: அங்கையற்கண்ணி.
நிறைந்தோன் தன்னை நின்றுணர்ந்து தாமுமொன்றின்றி அடங்கினர் என்பது சிவோகம்
பாவனையால் நான் என்னும் முனைப்பின்றி அருளில் முழுகி இரண்டறக் கலத்தலை என்க. இனி
நீயும் நீ தோன்றுதற்கிடமான விண்ணின்கண் அடங்கி நீ எனப்தின்றின்றி அவ்விண்ணேயாய்
விடுதி என வேண்டு இத்தோழியின் தத்துவ உணர்ச்சி சாலவும் பெரிதென்க. இங்ஙனமாக
ஒடுங்குதற்கு நீ முன்னரே நன்கு பழகி இருக்கின்றாய் என்பாள் ஆயிரந் தழற்கரத்து இருட்பகை
மண்டிலத்து ஓரொரு பனிக்கலை ஒடுங்கி நின்றடைதலின் என்றாள். இந்நிலை-யாங்கள் எம்
பெருமானை வரவேற்றற்குரிய இந்தநிலை என்க.
இனி,
மதியே நீ திருப்பாற்கடலில் தோன்றினை; இறைவன் எண்வகை வடிவங்களுள் ஒன்றாய் இருந்தனை;
அவன் முக்கண்ணில் அருட்கண்ணாகினை; அவன் அடிமுடியுங் கண்டனை: இத்துணைப் பெருந்தகைமையுடைய
நீ எளியேம் பெண் என்று எமக்கிரங்காயாம் எம்பெருமானை எதிர்கொள்ளும் இந்நள்ளிரவில்
நின் வடிவந் தோன்றாது மறைந்து விசுதி! எனத் தோழி, திங்கட் கடவுளை வேண்டுகின்றாள்
என்க. இதனால் சிறைப்புறத்தே நின்ற தலைவனுக்குத் தலைவியின் துன்பத்தையும் அவள்
அவனை இரவுக்குறியின்கண் எதிர்கொள்ளற்கு இடையூறு இருத்தலையும் குறிப்பாக உணர்த்தி
வரைவு கடாவினாள் ஆதலும் உணர்க. இனி இச்செய்யுள் பற்றிப் பழைய உரையாசிரியர் கூறும்
விளக்கம் வருமாறு:
|