|
அசரீரிவாக்குஞ்
சரசோதியும் பாடியதன்றி, என்றும் புலராதியாணர்நாட் செல்லுகினும் என்றுசங்கத்தார்க்கு
முன் முதன்மையாகப் பாடினமையின் முதற்கவி என்றார். பொருளாவன-அறமும் பொருளின்பமும்
வீடும். அவற்றுள் வீடு நூலாற் கூறப்படாமையின் மூன்றுமே கூறினார். இதுவென் றொருமையாற்
சுட்டியது ஒழுக்கம் வழக்குத் தண்டமென்ற மூன்றனுளொழுக்க மொன்றுமே கூறுங் கருத்தினாலும்,
பல்சுவையி லின்பச்சுவை யொன்றுமே கூறுங் கருத்தினாலும், பலநீதியிலரசன் காவல் நடாத்து
முறைமை கூறுங் கருத்தினுமென்க. நீயிமென்னு மும்மை யெச்சவும்மை. என்பதென ஒருசொல் வருவிக்க.
இந்நிலயறியதலாவது-பெண்ணினரெனவே, ஏகாதச கலைஐ யுண்டது பார்ப்பதியும் சதுர்த்தசகலையை
யுண்டது சிவனுமென்றறிதல், மடைப்பள்ளியினடுவவதரித்தெனவே-சதுர்த்த கலையையுண்டது அதற்கிறைவனாகிய
வருணனென்றறிதல். திருவடினெட்டினுளொரு வடிவாகியெனவே-பிரதம கலையையுண்டது அக்கினியென்றும்,
துதியகலையை யுண்டது ஆதித்தனென்றும், தசமகலையையுண்டது வாயுவென்றும் அறிதல். முக்கணி
லருட்கண்ணெனவே-பகையுமுறவு முண்டென்றறிதல். அடியறிகுவையெனவே-நவமகலையையுண்ட மறலியை
யுதைத்ததென்றறிதல். முடியறிகுவையெனவே-நெரித்துச் சூடினமையும் பாம்புமுண்டாகுமென்றறிதல்.
மாதுடன் றோன்றியென மீட்டு மதுவதித்துப் பயங்கரந்தோன்ற நிறைந்தோனடங்கின போலவெனவே-திரிதியகலையையுண்டது
விச்சுவதேவரென்றும், பஞ்சமகலையை யுண்டது வஷட்காரமென்றும், சஷடகலையையுண்டது பூசிக்கும்
வாசவனென்றும், சத்தம கலையையுண்டது முனிவரென்றும், அஷடமகலையையுண்டது ஏகபாதவசமென்றும்,
துவாதச கலையையுண்டது பிதிர்க்களென்றும், திரயோதசகலையை யுண்டது குபேரனென்றும், பூரணக்கலையை
யுண்டது பிரமாவென்றும் அறிதல். இவை நுகர்ச்சியும் வருத்துதலுங் குறித்துக் கூறினாள்.
அசரீரிவாக்கு-ஆகாசவாணி. சரசோதி-சரசுவதி.
மதியே!
நீ செய்யும் நன்மைக்கு நாங்கள் செய்யு நன்மை, இக் கடவுளிருக்குங் கூடல் இஃதாதலானும்,
நீறு போலத் தூளாக்குதற்கதுபோல் வொளியைக் காட்டுதலானு மமைதியென்பதாதலா னீயுமமைய்வாயாகவென
வினைமுடிவு செய்க.
நிலவு
வெளிப்பட வதனோடிரக்கங்கூறி வரைவுகடாவிய தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகப் புலந்து
கூறினமையின் இது வெகுளி விலக்கென்னு மலங்காரமாயிற்று. மெய்ப்பாடும் பயனும் அவை.
|