|
றுலகங்களிலும் பெறுதற்கு
அரியது என்று; எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்-எம்மனோர் கருதுதற்கியலாத உண்மையைத்
தானே கருதிக் கூறியும்; மல்உறத் தந்த-எம்பெருமாட்டி வளம்பெற வழங்கிய; ஈர்ந்தாழை-குளிர்ந்த
இத்தழை தானும் என்க.
(வி-ம்.) வாடி-ஐயத்தால்
வாடி. நின்று-சேட்படாது நின்று. என்முகம் அளக்குங்கால் என்றது மதியுடம்படுத்தற் பொருட்டு
எம் முகத்தை நோக்கி ஆராயுங்கால் எனினுமாம். குறி-கருத்து. என் கருத்து அவன் கண்வழியாக
உட்புக அறிந்து கொண்டு என்க. தழை ஒப்பற்ற தன் அன்பிற்கு அறிகுறியாகலின உலக மூன்றும்
பெறுதற்கு அரிதென்றான் என்பது கருத்து. இஃது எம்மனோர் எண்ணா வாய்மை ஆயினும் அவன்
அதனைக் கருதிக் கூறினான் என்றவாறு. தலைவனுடைய அறம்பிறழா உறுதியை இறைச்சி வகையால்
புலப்படுத்துவாக் கல்லுயர் நெடுந்தோள் அண்ணல் என்றாள். மல்-வளம்.
14-15:
இருந்திண்..............................துவைப்ப
(இ-ள்) இரும்திண்
போர்வை பிணிவிசி முரசம்-பெரிய திண்ணிய தோலாகிய போர்வையை மிகவுங் கட்டிய மணமுரசம்;
முன்னம் எள்ளினர் நெஞ்சுடை-களவொழுக்கத்தின் பொழுது இகழ்ந்த ஏதிலாருடைய மனம் துன்புறும்படி;
துவைப்ப-முழங்கா நிற்ப என்க.
(வி-ம்.) போர்வை-தோலாகிய
போர்வை. பிணிவிசி: ஒரு பொருட் பன்மொழி. இனி பிணித்து விசித்த எனக் கோடலும்
ஒன்று. முன்னம் என்றது களவொழுக்கம் நிகழ்ந்த காலத்தை. எள்ளினர்-அப்பொழுது இகழ்ந்து
அலர் துற்றியவர். துவைத்தல்-முழங்குதல்.
16-21:
மணம்..........................மறிய
(இ-ள்) மணங்கொள்
பேரணி பெருங்கவின் மறைத்தது என்று-திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணிகலன்களாகிய
பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்ததென்று; வண்டு-முலைக்கண்களாகிய வண்டு;
மருவி உண்டு களியாது-பொருந்தித் தேன் நுகர்ந்து மகிழாமல்; அது திகழ் இரண்டு பொந்தாமரை
முகிழ்செய்து பூத்த நெஞ்சுஉற-அவ்வண்டு திகழாநின்ற முலையாகிய இரண்டு பொந்தாமரை அரும்பி
மலர்ந்த நெஞ்சாகிய நீர்நிலையில் பொருந்த; வற்றா பெருகும் மேனி வெள்ளத்துள்-குறையாது
பெருகும் நிறமாகிய வெள்ளத்துள்; எழுமதி குறைத்த முழுமதி கருங்கயல் மறிய-விண்ணிலெழுந்த
திங்களைப் பிறையாக்கிய முகமாகிய முழுத்திங்களிடத்துணாகிய விழியாகிய கரிய கயல்
மீன்கள் குதியாநிற்ப என்க.
|