பக்கம் எண் :

160கல்லாடம்[செய்யுள்18]



     (வி-ம்.) மேனி வெள்ளத்தில் மறிய எனவே கவினையும் வெள்ளமாக உருவகம் பண்ணினார். வண்டு தாமரை நெஞ்சுற எனவே முதலைக் கூறச் சினையறி கிளவியாயிற்று. “தாமச் செப்பிணை முகட்டுத் தண் கதிர்விடு நீலமாமணி தாபித்தன போல் மனம் பருகு கருங்கண்ண” என்றதனை (சீவக. 171) ‘சினையிற்கூறு முதலறி கிளவி’ என்றாற் போல. எழுமதி குறைத்த முழுமதி: குறிப்பினால் வந்த உவமை உருவகம். இவையெல்லாம் மாட்டேறேலா உருவகம்.

“அஞ்சு வருதானை யாமரென்னு நீள்வயலுள்
 வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேற்
 பைங்கட் பனைத்தாட் பகட்டுழவ னல்கலா
 னெங்கட் கடையா விடர்”

என்றார் வெண்பா மலையினும். அது “மாட்டேறின்றி வருதலுமுரித்தே, கூட்டியாளுங் குறிப்பினானே” என்பதனால் அறிக.

22-23: நுனி..........................சிதற

     (இ-ள்) நுனித்தலை அந்தனர்-குடுமித் தலையையுடைய பார்ப்பனர்; கதழ்எரி வளர்த்து-விரைவினையுடைய தீயை வலர்த்து; சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதற-அத்தீயினுடைய சிவந்த நாத்தொறும் வெள்ளிய பொரியைச் சிந்தா நிற்ப என்க.

     (வி-ம்.) நுனியையுடைய குடுமியை ஆகுபெயரால் நுனி என்றார். இனி நுனித்தலை அந்தனர் என ஐகாரத்தை அசையாக்கிப் பொருள் கொள்ளினும் ஆம் வாய்-ஈண்டுத் தியின் நா. நா பலவாகலின் வாய்தொறும் என்றார். சிவந்த வாய்தொறும் வெண்பொரி என்புழிச் செய்யுளின்பமுணர்க.

24-25: செம்மாந்து.........................மகிழ

     (இ-ள்) செம்மாந்து மணந்த அளிய கூர்எரி-உளம் பூரித்துக் கூட்டுதற்குக் காரனமாகிய அருட்பண்புடைய மிகுந்த வேள்வித் தீயினை; தாயர் உள்மகிழ மும்முறை சுழன்று-நற்றாய் முதலிய தாய்மார்கள் உள்ளம் மகிழும்படி மூன்றுமுறை சுற்றி என்க.

     (வி-ம்.) செம்மாத்தல்-பூரித்தல். மணந்த என்னும் செய்த வென்னெச்சத்தை மணப்ப எபச் செயவென்னச்ச மாக்குக. தீ-இறைவன் அருட்குறியாகலின் இறைவன் அளியை அதற்கு ஏற்றினார். இனி அளிய தாயர் என இயைப்பினுமாம். கூர்: மிகுதிப் பொருள் குறித்த உரிச்சொல். தாயர்-நற்றாய் முதலிய பல தாயர் உளராகலின் பன்மை கூறினர்.

24-28: இல்லுறை............................சேர்த்தி

     (இ-ள்) இல்உறை கல்லின் வெள்மலர் பரப்பி-இல்லத்தின்கண் கிடக்கும் மரபிற்றாகிய அம்மிக்கல்லின்மேல் வெள்ளிய