பக்கம் எண் :

166கல்லாடம்[செய்யுள்19]



30
  லிரண்டைஞ் ஞாறு திரண்டமுக மெடுத்து
மட்புல னகழ்ந்து திக்குநிலை மயக்கிப்
புரியாக் கதமோ டொருபா லடங்குங்
35
  கங்கையிற் படிந்த பொங்கு தவத்தானு
மந்நெடு வேணியிற் கண்ணியென விருந்து
தூற்றுமறு வொழிந்த வேற்றத் தானு
மணிவான் பெற்றவிப் பிறையைப்
பணிவாய் பிரிந்து தாமரை மகளே.

(உரை)
கைகோள்: களவு. தோழை கூற்று

துறை: பிறைதொழுகென்றல்.

     (இ-ம்.) “நாற்றமும் தோற்றமும்” (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் எனவரும் விதி கொள்க.

35: தாமரைமகளே.........................

     (இ-ள்) தாமரைமகளே-செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் போல்வாய்! என்க.

     (வி-ம்.) இனி மங்கலமாய்ப் போழ்தின் முகமலர்ச்சியுடைத்தாய் எல்லோரானும் நன்கு மதிக்கப்படும் தன்மையும் உடைத்தாய், விளங்கும் தாமரை மலரை ஒத்த மகளே எனினுமாம்.

1-4: நெடுவளி.........................கோடானும்

     (இ-ள்) எழுமலை விழுமலை புடைமணிஆக-இப்பிறையானது எழுமலையும் விழுமலையும் ஆகிய இரண்டு மலைகளும் இரண்டு பக்கங்களினும் கட்டும் மணிகளாக; நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி-நீண்ட காற்றாகிய மூச்சினை உதிர்த்து மழையாகிய மதத்தினைச் சிந்தி; மீன்புகர் நிறைந்த-விண்மீன்களாகிய புள்ளிகள் நிறைந்த; வான் குஞ்சரமும் வால்பெற முளைத்த-வானமாகிய யானையினது முகத்தில் தூய்மையுண்டாகத் தோன்றிய; கூன் கோடு ஆனும்-வளைந்த மருப்பேயோயினும் என்க.

     (வி-ம்.) எழுமலை-கோள்கள் தோன்றுடற்கிடனான மலை; (உதயகிரி) விழுமலை-அவை மறைதற்கிடனான மலை; (அத்தமனகிரி). மலைகளாகிய மணிகளையும் நெடுவளியாகிய மூச்சினையும் மழையாகிய மத நீரினையும் மீனாகிய நெற்றிப் புள்ளிகலையும் உடைய வானமாகிய யானை முகத்திலே தோன்றிய வளைந்த மருப்பாயினும் என்க. கூன்-