|
வளைவு, கோடானும்-கோடு
ஆயினும். ஆயினுமென்பது ஆனுமெனக் குறைத்து நின்றது. ஒன்றானுந் தீச்சொல் (குறள்-128)
என்றாற்போல, இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.
5-6:
பேச.....................தோணியதானும்
(இ-ள்) பேச நீண்ட
பல்மீன் நிலைஇய வானக்கடலில்-இன்னும் இப்பிறை சொல்லத்தொலையாத பலவாகிய மீன்கள்
நிலைபெற்ற வானமாகிய கடலின்கண் இயங்குமொரு; தோணியது ஆனும்-தோணியே யாயினும் என்க.
(வி-ம்.) வானக்கடலில்
தோணி என்பது ஏமப்புணையைச் சுடும் என்றாற்போல ஏகதேச உருவகம். எனவே இருளாகிய பாசியை
நீத்து உலகத்தை விளக்கமாகிய கரையில் ஏற்றும் தோணிஎன்றுங் கூறிக் கொள்க. பன்மீன்
இரண்டிற்கும் சிலேடை. தோணி-மரக்கலம்.
7-8:
கொழுநர்......................நாவாயானும்
(இ-ள்) கொழுநர்
கூடும் காம உததியைவிட-தலைவிமார் தங்கணவரொடு கூடுதற்குக் காரணமாகிய காமக் கடலின்
நீங்க; கரை உகையும் நாவாயானும்-இன்பமாகிய கரையிற் செலுத்தும் படகேயாயினும் என்க.
(வி-ம்.) கொழுநர்-கணவர்.
காமவுததி-காமமாகிய கடல். உகையும்-செலுத்தும். நாவாய்-ஒருவகை மரக்கலம்.
9-11:
கள்ளமர்.....................வில்லானும்
(இ-ள்) ஐங்கணைக்
கிழவன் கள்அமர் கோதையர் வெள்ளணி விழவில்-இன்னும் அப்பிறை ஐந்து மலரம்புகளையுடைய
காமவேள் தேன் பொருந்திய மலர்மாலையினையுடைய மகளிருடைய பிறந்தநாள் விழாவின்கண்;
உள்மகிழ இழைத்து வளைத்த-அவர்தம் உள்ளத்தினுள்ளே மகிழும்படி செய்து வளைத்த; கருப்பு
வில் காட்சியானும்-கரும்பு வில்லைப்போலக் காணப்படுவதொன்றாயினும் என்க.
(வி-ம்.) ஐங்கணைக்
கிழவன்-முல்லை, அசோகு, தாமரை, மாமலர், கருங்குவளை என்னும் ஐந்து மலரம்புகளையுமுடைய
காமவேள். கள்-தேங் வெள்ளணி விழவு-பிறந்தநாள் விழா. கரும்பகடும் செம்பொன்னும்
வெள்ளணி நாட்பெற்றார் எனவரும் வெண்பா மாலையினும் அஃதப்பொருட்டாதல் உணர்க.
காணப்படுவதனைக் காட்சி என்றார்.
12-14:
நெடியோன்.........................உரிமையானும்
(இ-ள்) நெடியோன்
முதலாம் தேவர்கூடி-இன்னும் அப்பிறைத்தானும் திருமால் முதலிய தேவர்களெல்லாம் ஒருங்கு
|