பக்கம் எண் :

168கல்லாடம்[செய்யுள்19]



கூடி; வாங்கிக் கடைந்த தேம்படி கடலின்-வலித்துக் கடைந்த இனிமையுடைய திருப்பாற் கடலில்; அமுதுடன் தோன்றிய உரிமையானும்-அமிழ்தத்தோடே பிறந்த உரிமை உடைமையானும் என்க.

     (வி-ம்.) நெடியோன்-திருமால். தே-இனிமை. தேம்படு-கடல் என்றது திருப்பாற் கடலினை. இனி, தேம்-பாலுக்கு ஆகுபெயர் எனினுமாம்.

15-16: நின்..............................பீடதுவானும்

     (இ-ள்) நின் திரு நுதல் ஒளியை-அப்பிறை உன்னுடைய அழகிய நெற்றியின் ஒளியை; ஆடி நிழல்-கண்ணாடி நிழலைத் தன்னிடத்திற் காட்டினாற்போல; விசும்பு உடலில் காட்டிய பீடதுவானும்-விசும்பு தன்னிடத்தில் காட்டிய பெருமையை உடையதாதலாலும் என்க.

     (வி-ம்.) இஃது எடுத்துக் காட்டுவமை. பீடது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. நுதலொளியை எனற்பாலது நுதலையொளியென எழுத்து நிலைமாறிற்று.

17-18: கரை.....................புகழானும்

     (இ-ள்) கரை அற அணியும் மானக் கலனுள்-எல்லையின்றி அணிகின்ற பெருந்தன்மையுடைய அணிகலன்களுள் வைத்து; தலைபெற இருந்த நிலை புகழாலும்-நின்னுடைய தலைக்கு அணியும்படி பிறை என்னும் ஓரணிகலனாகும் நிலைத்த புகழுடமையானும் என்க.

     (வி-ம்.) பிறை என்பது மகளிர் தலையணிகலன்களுள் ஒன்றாதல் பற்றி இங்ஙனம் கூறினாள். பிறை அணிகலன் என்பதனை 14ஆம் செய்யுளில் “தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக” என்பதனானும் உணர்க. மானம், கொண்டாட்டமுமாம். நிலைபுகழ்-நிலைத்த புகழ்.

19-20: மண்..........................ஈகுதலானும்

     (இ-ள்) மண் அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு-நில உலகம் அனைத்தும் நிறைந்துள்ள பலவாகிய உயிரினங்களுக்கு; ஆயா அமுதம் ஈகுதலானும்-ஆராய்ந்து அமிழ்தத்தை வழங்குதலாலும் என்க.

     (வி-ம்.) மண்ணகம்-நிலஉலகம். ஆயா-ஆய்ந்து

21-24: பாற்கடல்.........................கடவுள்

     (இ-ள்) பால் கடல் உறங்கும் மாய்வன் போல-திருப்பாற்கடலிலே துயிலுகின்ற திருமால் கிடன்ம்தாற்போல; தவல மாடத்து அகல் முதுகுபற்றி-வெள்ளிய மேனிலைமாடத்தின்