பக்கம் எண் :

170கல்லாடம்[செய்யுள்19]



     (இ-ள்) அந்நெடு வேணியில் கண்ணி என இருந்து-அக்கங்கை ஒருபாலருடைய சிறப்புடைய நீண்ட அச்சடையின்கண் சூடும் பூவாக இருந்து; தூற்றம் மறு ஒழிந்த ஏற்றத்தானும்-உலகத்தோர் பழிதூற்றுவதற்குக் காரனமான களங்கம் ஒழிந்ததனால் வந்த உயர்வினாலும் என்க.

     (வி-ம்.) சடையில் கங்கை ஒருபால் அடங்கும் என்றமையால் அத்தகைய சிறப்புடைய வேணி என்பாள் அந்நெடுவேணி எனச் சுட்டினாள். கண்ணி-தலையிற் சுடும் மலர்மாலை. பிறையும் மாலைபோலத் தலையிற் சூடப்படுதலின் கண்ணியென இருந்து என்றாள். மறுஒழிந்தமைக்கு வேணியில் இருந்தது குறிப்பேதுவாயிற்று. ஏற்றம்-உயர்வு.

34-35: அணி..........................புரிந்து

     (இ-ள்) அணிவான் பெற்ற இப்பிறையைப் புரிந்து பணிவாய்-அழகிய வானம் ஈன்றருளிய இந்தப் பிறையை நீயும் விரும்பித் தொழுவாயாக! என்க.

     (வி-ம்.) அணி வான்-அழகிய வானம். புரிந்து-விரும்பி. இனி, தாமரைமகளே! இப்பிறையானது கோடாயினும் தோணியாயினும், நாவாவாயினும், விற்போலக் காணப்படுவதாயினும் இது உரிமையினாலும் பெருமையினாலும் புகழப்படுதலாலும் ஈகுதலாலும் தவத்தாலும் ஏற்றமுடைமையானும் நம்மாற் பணியத்தகும், ந்யும் விரும்பிப் பணிவாயாக என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.