|
30
|
|
தனிநெடு
விசும்பு திருவுட லாக
விருந்திசைப் போக்குப் பெருந்தோ ளாக
வழுவறு திருமறை யோசைக ளனைத்து
மொழிதர நிகழும் வார்த்தை யாக
வுண்ணிறைந் துழலும் பாடிரண் டுயிர்ப்புப் |
|
35
|
|
பகலிர
வொடுங்கா விடுவளி யாக
வடுபடைப் பூமியன் கடுமுரண் பற்றி
யிட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலந்
தளளையொடு நிறைநீர் விடுவண போலப்
புரசையொடு பாச மறவுட னிமிர்ந்து |
|
40
|
|
கூடமுங்
கந்துஞ் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல் கான்றுமய லுவட்டி
யேழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூட லுறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையினர் போலவுங் |
|
45
|
|
கல்லா
மனனினுஞ் ச்வெலுத்தி பெரும
விளமையு மின்பமும் வளனுங் காட்சியும்
பின்புற நேடின முன்பவை யன்றி
நுனித்த மேனித் திருவினட் கிடைத்த
வினைதரு மடைவி னல்லது |
|
|
|
புனையக்
காணேன் சொல்லா யினவே. |
(உரை)
கைகோள், கற்பு. தோழிகூற்று
துறை: ஆற்றாமை
கூறல்.
(இ-ம்.) இதற்கு பெறற்கரும்
பெரும் பொருள் சொல் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண், புரியுங்காலை
எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும் எனவரும் விதி கொள்க.
1-3:
பொருப்பு..................அன்றி
(இ-ள்) பொருப்புமலி
தோளினும்-மலையினுட் காட்டில் உயர்ச்சியால் உயர்ந்த தோளின்கண்ணும்; நெருப்பு உமிழ்
வேலினும்-தீயை உமிழ்கின்ற வேலின்கண்ணும்; வற்றாக் காதலின்-குறையாத காதலாலே;
செந்திருமகளை செயம் கொள் மங்கையை-சிவந்த திருமேனியையுடைய திருமகளையும் வெற்றி
|