|
கோடற்குக் காரனமான
வீரமகலையும்; கொண்டமதி அன்றி- கைக்கொண்டதனால் வந்த அறிவே யன்றி என்க.
(வி-ம்.) பொருப்பு-மலை.
மலிதல்-மிகுதல். தோளிலே திருமகளையும் வேலிலே வீரமகளையும் கொண்ட மதி என்க.
17-18:
அன்பும்..........................நீயே
(இ-ள்) அன்பும் சூளும்
நண்பும் நடுநிலையும்-அன்பும் வஞ்சினமும் காதலுடமையும் நடுநிலையும்; தடையா அறிவும் உடையோய்
நீயே-கல்வி கேள்விகளிற் றடை படாத அறிவும் உடைய நீ ஆதலால் என்க.
(வி-ம்.) அன்பு-தொடர்புடையார்மாட்டுச்
செல்லும் மனநெகிழ்ச்சி. சூள்-நின்னிற்பிரியேன் என்னும் ஆணைமொழி. நண்பு-யாவர்மாட்டும்
கேண்மையுடைய. நடுநிலை-பகை. நொதுமல், நண்பு என்னும் மூன்றிடத்தும் அரத்தின் வழுவாது
ஒப்ப நிற்கும் நிலை. தடையா-தடைபடாத. அறிவு-உண்மையறிவு, கல்வியறிவு, கேள்வியறிவு,
பட்டறிவு (அனுபவ அறிவு எனப் பலவகைப்படும்.
21-23:
மருங்கில்..........................அறிந்தும்
(இ-ள்) மருங்கில்
பாதி தரு துகில் புனைந்தும்-இடையில் பாதியை வெளியே காட்டும் ஆடையை உடுத்தியும்;
விளைவயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும்- தாம் விளைந்த வயலின்கண் அடங்கிக் கிடக்கும்
உதிர்ந்த நெல்லாகிய உணவினாலும்; தம்மில் வீழுநர்க்கு-தங்களில் ஒருவரை ஒருவர் விரும்பும்
காதலர்க்கு; இன்பம் என்று அறிந்தும்-போதிய இன்பம் உண்டாகும் என்று அறிந்து வைத்தும்
என்க.
(வி-ம்.) மெய்யாய
காதலர்க்கு ஓரலவு ஆடை உணவு முதலிய இன்றியமையாப் பொருள்கள் இருப்பினும் அமையும்.
அவர்கள் பெரிதும் இன்புற்று வாழ்தல் கூடும் என்னும் உண்மையை நீ அறிந்திருந்தும் என்பது
கருத்து. மருங்கிற் பாதிதரும் துகில் என்றது உடுத்துதற்குப் போதாத குறைத்துகில் என்றவாறு.
விளைந்த வயலில் நெல்லரியுங்கால் உதிர்ந்த நெல்லைப் பொருக்கி அவற்றையே உண்ணும்
நல்கூர் நிலையிலும் என்பது கருத்து. இந்நிலையிலும் இன்பம் குறையாமைக்குக் காரணம்
குறிப்பாக உணர்த்துவாள் தம்மில் வீழுநர் என்றாள். இக்கருத்தோடு, தாம்வீழ்வார்
தம்வீழப் பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழில் கனி எனவரும் திருக்குறளையும் (1191)
நோக்குக. தம்மில் வீழுநர்க்கு மருங்கிற்பாதி தரும் துகில் புனைந்தும்.................இன்பம்,
என்னும் இதனோடு,
|
இளமையுங் ஆமமும்
மோராங்குப் பெற்றார்
வலமை விழைதக்க துண்டோ வுளநாள்
ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
|
|