பக்கம் எண் :

மூலமும் உரையும்175



“ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
 சென்ற விளமை தரற்கு”
(கலி. 18. 7. 12)

எனவரும் கலியையும் நோக்குக.

42-43: இளமையும்......................அன்றி

     (இ-ள்) முன்பு நேடின அவை அன்றி-முன்னர்த் தேடப்பட்ட அப்பொருல்கலே வாழ்விற்கு அமையும் என்னும் அமைதியின்றியும்; இளமையும் வளனும் காட்சியும் பின்புற-நுங்களுடைய இளமையும் இன்பமும் நின் முன்னர் ஈட்டிய பொருளும் அழகும் பிற்படும்படி என்க.

     (வி-ம்.) முன்பு நேடின அவை என மாறுக; என்றது தலைவன் பண்டு தேடிய பொருள்களை, வளன்-வளம். இது முன்னோர் ஈட்டிவைத்த செல்வத்தைக் குறிக்கும். இளமை இன்பம் காட்சி இம் மூன்றும் இருவர்க்கும் பொது. பிற்பட என்றது இவற்றைப் பொருளாகக் கருடாமல் இவை ஒதுங்கிக் கிடக்கும்படி என்றவாறு.

19-20: எழுந்து............................செய்ய

     (இ-ள்) எழுந்து காட்டி பாடுசெய் கதிர்ப்ல்-காலையில் எழுந்து தல் ஒளியினை உலகிற்குக் காட்டி மாலையில் மறைகின்ற ஞாயிற்று மண்டிலத்தல்ப்போல; தோன்றி நிலை நில்லாப் பொருள் செய்ய-உலகின்கண் தோன்றி நிலை நில்லாது அழியும் பொய்ப்பொருலை ஈட்டுதற்கு என்க.

     (வி-ம்.) காலையில் எழுந்து மாலையிற்படும் என ஓதுக. கதிர்-ஞாயிறு. நிலை நில்லா என மாறுக. இதனோடு,

“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
 நிலா உலகம் புல்லிய நெறித்தே”
(தொல். புறத். 23)

எனவரும் நூற்பாவினையும்,

“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
 போக்கு மதுவிளிந் தற்று”
(குறள். 332)

எனவரும் திருக்குறளையும் காண்க.

24-31: தண்மதி...........................வளியாக

     (இ-ள்) தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண் வைத்து-குளிர்ந்த திங்களையும் கடிய சுடரையுடைய ஞாயிற்றினையும் வெவ்விய தீயினையும் கண்களாகப் பெற்று; மண்பரப்பு அளவா பாதம் ஆக-நிலப்பரப்பு யாவரானும் அளக்கப்படாத திருவடியாக; தனிநெடு விசும்பு திடுஉடல் ஆக-ஒப்பற்ற நெடிய வானம் அழகிய உடம்பாக; இருந்திசைப் போக்குப் பெருந்தோள்