|
ஆக-பெரிய திசைகளின்
பரப்புப் பெரிய தோளாக; வழுஅறு திருமரை ஓசைகள் அனைத்தும்-குற்றமற்ற அழகிய மறைகளின்
ஒலிகள் எல்லாம்; மொழிதர நிகழும் வார்த்தை ஆக-மொழிகளை உண்டாக்க நிகழுகின்ற
சொற்களாக, பகல் இரவு ஒடுங்காவிடு உயிர்ப்பு-பகலும் இரவும் ஆகிய இருபொழுதிலும் இடையறாது
விடுகின்ற மூச்சு; உள் நிறைந்து இரண்டு பாடு உழலும்-உள்ளம் நிறைந்து அகமும் புறமும்
போக்குவரவு செய்யும்; வளி ஆக-காற்றேயாக என்க.
(வி-ம்.) திங்கள்
முதலியன கண்ணாகவும் நிலம் அடியாகவும் விசும்பு உடலாகவும் திசைகள் தோளாகவும் மறையோசைகள்
சொல்லாகவும் வளி உயிர்ப்பாகவும் என்க. தண்மதி-திங்கள். கடுஞ்சுடர்-ஞாயிறு. அழல்-தீ.
விசும்பு-வானம். போக்கு-பரப்பு. வார்த்தை-சொல். அகமும் புறமுமாகிய இரண்டு பாடும்
என்க. வளி-காற்று. ஒழுங்காவீடு உயிர்ப்பு என்றும், உழலும் வளியாக என்றும் கொண்டு
கூட்டுக. உயிர்ப்பு-மூச்சு.
32-34:
அடு...............................கடவுளை
(இ-ள்) அடுபடைப்
பூமியன்-கொல்லும் படையினையுடைய பாண்டியன்; கடுமுரண் பற்றி இட்டவெம் கொடுஞ்சிறை
பட்ட கார் குலம்-கடிய இகல் காரணமாகப் புகுத்திய வெவ்விய கொடிய சிறைக்கோட்டத்தின்கண்
அகப்பட்ட முகிற்கூட்டம்; தளையொடு நிறை நீர் விடுவனபோல-விலங்குகளுடனே மிகுந்த நீரைச்
சொரிவன போல; ஏழு உயர் கரிதிரள்-ஏழு முழம் உயர்ந்த யானைக் கூட்டம்; புரசையொடு
பாசம் அற உடல் நிமிர்ந்து-கழுத்திலிடு கயிஉம் பாசக்கயிறும் அற்றுப்போகும்படி உடலை
நிமிர்த்து; கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப-தம்முடைய கொட்டிலிடமும் தறியிடமும்
சேராய்க் குழம்பி நின்று சேர்ந்தோரைத் துன்புறுத்தும்படி; மூன்று மதம் நெடும்புனல்
கான்று-மூன்றாகிய மதமாகிய மிக்க நீரினைச் சினத்தால் முழங்குதற்கிடனான; கூடல் பெருநகர்
உறைதரு கடவுளை-நான்மாடக் கூடலாகிய பெரிய மதுரை மாநகரில் வீற்றிருந்தருளிய சோமசுந்தரக்
கடவுளை என்க.
(வி-ம்.) அடுபடை:
வினைத்தொகை. பூமியன்-பாண்டியங் அவன் உக்கிரபாண்டியங் கடுமுரண்-கடிய இகல். இந்திரனுக்கும்
தனக்கும் உண்டான கடிய இகல் என்பது கருத்து. கார்க்குலம்-முகிற்கூட்டம். தலை-விலங்கு.
புரசை-யானைக்கழுத்திலிடும் கயிறு. பாசம்-கயிறு. ஈண்டுக் காலிற்கட்டும் கயிறு என்க.
கூடம்-யானைக்கொட்டில். கந்து-தறி. மும்மதம்-யானையின் செவி, கவுள், குறி என்னும்
மூன்றிடத்தினும் சொரியும் மதம். கான்று-சொரிந்து. மயல்-மயக்கம். உவட்டி-மிகுந்து.
ஏழு-ஏழுமுழம், யானை ஏழுமுழம் உயர்ந்திருத்தல் நல்லிணக்கணம் என்க. கதம்-சினம். சிறைப்
|