|
பட்டமுகில் மழை பொழிந்தாற்போலே
மதம் பொழியும் களிறுகள் பிளிறும் கூடல் என்க.
40-41:
நிறைய...............பெரும
(இ-ள்) பெரும-எம்பெருமானே!
நிறைய பேசாக் குறையினர் போலவும்-முழுதும் வாழ்த்தாமையால் உண்டாய குற்றத்தினை யுடையார்
போலவும்; கல்லா மனனினும்-மெய்ந்நூல்களைக் கல்லாத கயவர் நெஞ்சம் போலவும்; செலுதி-சூள்
பொய்த்த குற்றமுடையையாகவும் ஒருவழிப் படாமலும் பாலையிலே செல்லாநின்றனை என்க.
(வி-ம்.) நிறையப்
பேசுதலாவது முழுதும் வாழ்த்துதல். கல்லா மனம் ஒருவழிப்படாததுபோல நீயும் காதலாகிய
ஒரு நெறியிற் படாமல் என விரித்தோதுக.
4-6:
களவு...................அரற்ற
(இ-ள்) களவு அலர்
தூற்ற-களா மலரைச் சொரியா நிற்பவும், தளவு கொடி நடுங்க-முல்லைக்கொடி அசையவும்;
வேயுளம் பட்டு பூவை கண் கறுக்க-மலரும் பருவமெய்துக் காயா தம்மிடமெலாம் கறாநிற்பவும்,
வண்டு-வண்டு; தண்டா மயல்கொடு-குறையாத விருப்பத்தைக் கொண்டு; பரந்து அரற்ற-யாண்டும்
பரவி முரலாநிற்பவும் என்க.
(வி-ம்.) களவு-களா;
குறியதன்கீழ் ஆக்குறுகி உகரம் ஏற்று நின்று களவு என்றாயிற்று. தளவு-முல்லை. பூவை வேயுள்
பட்டு என மாறுக. வேயுள்-மலர்ச்சி. வேய்; பகுதி உள்: விகுதி. எனவே மலர்தல் உண்டாகி
என்க. வேயுளம் என்புழி அம்: இசைநிறை. பூவை-காயா. கன்-இடம். தண்டா-குறையாத. இனி
இவை எம்பெருமானே, நின்னுடைய பிரிவினை கருதிக் களவு அலர் தூற்றவும் தளவு அஞ்சி நடுங்கவும்
பூவை வெகுண்டு கண் சிவப்பவும் வண்டு மயங்கி அழாநிற்பவும் எனவும் வேறு பொருள் தோற்றுமாறுமுணர்க.
7-11:
காலம்..........................உகுப்ப
(இ-ள்) தோன்றி
காலங் கருதி கை குலைப்ப-செங்காந்தள் இப்பருவத்தை நினைந்து கை விரல்கள் போல்
மலர்க்குலைகளைத் தோன்றாநிற்பவும்; கொன்றை கண் தும்பு ஊரும் பசப்பு நிழல் தன்னை-கொன்றைகள்
பிரிந்த மகளிர் கண்ணிடத்தே அத்துன்பங் காரணமாகப் பாய்கின்ற பசலையினது ஒளியை,
திருமலர் எடுத்துக்காட்ட-தமது அழகிய மலரால் பிறர்க்கு எடுத்துக்கூறாநிற்பவும்; கோடல்
இறை நில்லாதென்பன நிலைக்க-வெண்காந்தள்கள் அம்மகளிர் கையின்கண் அணிந்த வலையல்
இனி அவர்தம் கையினிடத்தே தங்கியிராமல் இங்ஙனமே கழன்று வீழும் என்று அறிவுறுத்துவனபோல;
வளைந்த கல்.-12
|