பக்கம் எண் :

178கல்லாடம்[செய்யுள்20]



வள் அலர் உகுப்ப-தம்முடைய வலைந்த பெரிய மலர்களைச் சிந்தாநிற்பவும் என்க.

     (வி-ம்.) தோன்றி-செங்காந்தள். காலம்-ஈண்டுப் பருவம். குலைப்ப-குலை தோற்றுவிப்ப. கைகுலைப்ப-மகளிர் கை போலப் பூங்குலையைத் தோற்றுவிப்ப என்க, துன்பு ஊரும் பசப்பு என மாறுக. நிழல்-ஒளி. அஃது ஈண்டு நிறத்தையுணர்த்தி நின்றது. பசலையின் நிறம் பொன்னிறமாதல் பற்றிக் கொன்றை தம் மலரின் நிறத்தைக் காட்டிப் பசலையின் நிறத்தை நினைப்பூட்டியது என்பது கருத்து. “பூப்போ லுன்கண்பொன் போர்த் தனவே” (குறுந். 101) என்றார் பிறரும் கோடல்-வெண்காந்தள். இக்காந்தளின் மலர் சங்குவலையல் போன்றன ஆதலின் அவை பிரிந்த மகளிர் வளை உகுதற்கு உவமையாக்கப்பட்டன. இறை-கோடு; ஆகுபெயர். கை என்க. நிலைக்க: உவம உருபு. வள்-பெரிய.

12-14: கண்.....................காலை

     (இ-ள்) கருவிளை மலர் அருகு நின்று-கருவிளை மலர்கள் (எம்பெருமாட்டியின்0 பக்கத்தே நின்று நீக்கி; கண் துளி துளிக்கும் சாயப் பையுளை-(அவளுடைய) கண்கள் துன்பக் கண்ணீர்த் துளியைச் சிந்துதற்குக் காரணமாகிய கெடாத துன்பத்தை; கூறுபட நாடி ஆசையொடு மயங்கி நீர் உகுப்ப-பகுதிப்பட ஆராய்ந்து பார்த்துத் திசைகளிற் பொருந்திக் கண்ணீரினைச் சிந்தாநிற்பவும்; ஆருயிர் பேர் அழல் வாடை தடவ-பெறுதற்கரிய உயிரினை மிகுந்த வெப்பமுடைய வாடைக் காற்றுத் தடவாநிற்பவும்; விளைக்கும் காலமும் முளைத்த காலை-உண்டாக்கும் பருவம் தோன்றிய இக்காலத்தே என்க.

     (வி-ம்.) கருவிளை-ஒருவகைக் கொடி. இதனை இக் காலத்தார் காக்கணங்கொடி என்பர். அருகு நின்று என்றது தலைவியின் கண்களையாம் நிகர்த்துமோ என்றது காண்டற்கு அருகு நின்று நோக்கி என்பதுபட நின்றது. நோக்கி என ஒரு சொல் பெய்க. சாயா-கெடாத. பையுள் துன்பம். ஆசை-திக்கு. இனி அவாவோடும் மயங்கி என ஒரு பொருள் தோன்றுதலும் உணர்க. நீர்-கள்ளாகிய நீர். இனி இதன்கண் கருவிளைமலர் தலைவியின் கண்கள் சொரியும் துளி நோக்கித் தாமும் அவள்பால் விருப்பமுடையனவாய் மயங்கிக் கண்ணீர் துளிப்பவும், வாடைக்காற்று அவள் உயிரைக் கைக் கொள்ளுதற்கு இதுவே ஏற்ற செவ்வி என்றுணர்ந்து அவளுயிரைத் தடவிப் பார்க்கவும் எனவும் வேறு பொருளும் தோன்றுதலுணர்க.

44-46: நுனித்த.....................சொல்லாயினவே

     (இ-ள்) நுனித்தமேனி திருவினட்கு அடைத்த-கூர்ந்த வுருவ அழகையுடையாளுக்கு அமைத்த; விளைதரும் அடைவின் அல்லது-ஊழ்வினை தரும் முறைமையின்றி; சொல் ஆயின புனைய காணேன்-சொல்லித் தேற்றுதற்கு அமைந்த