|
காரியங்களைப் புனைந்து
கூறுதற்கு யானும் அறிகின்றிலேன் என்க.
(வி-ம்.) இஃது எதிர்வினை
விலக்கு என்னும் அலங்காரம். நுனித்தல் என்றும் பாடம். இதற்கு நுனித்தல் வினை எனக்
கூட்டி உரிமையாகிய வினை என்க. ஏகாரம் ஈற்றசை. இனி இதனைப் பெரும நீ தோளினும்
வேலினும் கொண்ட அறிவன்றி அன்பு முதலியனவும் உடையை ஆதலால் பாதிதரும் துகில் புனைந்தும்
உதிர் நெல் உண்டும் தம்மில் வீழுநர்க்கே இன்பமென்றறிந்தும் இளமை முதலிய பிற்படப்
பொருளைத் தேடச் செல்லுகின்றவனை; அதனால் கார்ப்பருவம் தோன்றிய காலத்தே இவள்
இறந்து படாமல் ஆவன் செய்தற்குரிய செயல்களை யான் அறிகின்றிலேன் என இயைபு காண்க.
இனி இதன்கண் எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர் போல் தோன்றி என்பது நாளதுசின்னம்.
கடைநாளிது வென்றறிந்தாரு மில்லை (பாலைக்கலி) எனவும், உண்டோ உளநாள் (பாலை)
எனவும் பிறரும் ஓதுதல் காண்க.
| |
புறந்தந்து
இருளிரியாப் பொன்னேமி யுய்த்துச்
சிரந்த வொளிவளர்க்குந் தேரோன்-மறைந்தான்
புறவழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார் |
என வரும் பழம்பாடலையும்
ஈண்டு நினைக.
இளமையும்
காமமும் பிற்பட என்பதும் இளமையதருமை. இளமையும் காமமும் நின்பணி நில்லா (பாலை
12) எனப் பிறரும் கூறுதல் காண்க.
தடையா
அறிவு முடையோய் என்பது தாளாண் பக்கம். அறிவினான் முயலுதலின் உரனுடை யுள்ளத்தை என்றார்
பிறரும். நில்லா நிலைப் பொருள் செய்ய என்றது தகுதிய தமைதி.
| |
வீழுநர்க் கிறைச்சியாய்
விரல்கவர் பிசைக்குங்கோ
லேழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம்
யாழிநுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ;
மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்கற் போலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறுந்
திருவினுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ:
புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை
வரையின்றிச் செறும்பொழுதிற் கண்ணோடா துயிர்வௌவு
மரைசினுந் நிலையிலாப் பொருளையு நச்சுபவோ (கலி. 8) |
எனப் பிறரும் ஓதுதல்
காண்க.
இனி
மருங்கிற் பாதி தரும் துகில் புனைந்து என்பது இன்மையதிழிவு. ஒரோஒ கை தம்முட்டழீஇ
யொரோஒகை ஒன்றன்கூ ருடையுடுப்பவரே யாயினும் (கலி. 18) என வருதலும் காண்க. நேடின்
முன்பவை யன்றி என்பது உடைமையது உயர்ச்சி. இளமையும்
|