|
காமமும் ஓராங்குப் பெற்றர் வலமை விழைதக்கது உண்டோ (கலி 18) என வருதலும் காண்க. செல்லுதி பெரும என்பது அன்பினதகலம். அரும்பொருள் வேட்கையின் உள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதியைய (கலி. 18) என வருதலும் காண்க. உதிர் நெல்லுணவிலும் தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்பது தகுதிய தமைதி. இனி துன்பு பசப்பூரும் கண்ணிழ றன்னைத் திருமலர் எடுத்துக் கொன்றை காட்ட என்பதும் இறைவனை நில்லா தென்பன நிலைக்கக் கோடல் வளைந்த வள்ளலருகுப்ப என்பதும் கண்டுளி துளிக்கும் சாயாப் பையுளைக் கூறுபட நாடி யாசையொடு மயங்கிக் கருவினை மலர்நீ ரருகுநின் றுகுப்பவென்பதும், பேரழல் வாடை யாருயிர் தடவ என்பதும், அகற்சிய தருமை. என்றோளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் என்றாற் போலவும், இடைமுலைக்கோதை குழைய முயங்கு முறைநாள் கழிந லுரிமை காண்டை என்றார் போலவும், இது நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே யென்றமையான் முன்னொருகாற் றலைவன் கூறக்கேட்டுத் தோழி யதனை யுட்கொண்டு கூறினாள். ஒன்றாத் தமரிவும் பருவத்துஞ் சுரத்தும் என்னு மகத்திணைச் சூத்திரத்தில் நாளது சின்மையு மிளமைய தருமையுந், தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியு, மின்மைய திழிவு முடைமைய துயர்ச்சியு, மன்பின தகலமு மகற்சிய தருமையும் என்றார் தொல்காப்பியனார். மெய்ப்பாடும் பயனும் அவை.
|