|
65
|
|
நீங்கினர் போக்கு மீங்குழி வருதுங்
கண்டது கூறுதி யாயி |
| |
|
னெண்டகப்
போற்றிநின் கால்வணங் குதுமே. |
(உரை)
கைகோள்; களவு. தலைவி கூற்று
துறை:- தன்னுட்
கையா றெய்திடு கிளவி
(இ-ம்.) இதற்கு மறைந்தவற்
காண்டல் (தொல். கள. 21) எனவரும் நூற்பாவின்கண் அருமை செய் தயர்ப்பினும் எனவரும்
விதிகொள்க.
1-2:
நீர்.....................பாசடையும்
(இ-ள்) நீர் நிலை
நின்று கால் கறுத்து எழுந்து-கடலின்கண் நீரைப் பருகி நின்று தம்மிடமெல்லாம் கறுத்து
விசும்பின்கண் எழுந்து; திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும்-திசை நிலைகளிலே பரவிச்
சென்ற முகில்களாகிய பசிய இலைகளையு என்க.
(வி-ம்.) நீர் நிலை-கடல்.
நிலைநீர் என நிற்கவேண்டிய மொழிகள் முன்பின்னாக மாறி நீர் நிலை என்று நின்றன.
நிலைநீர்: அன்மொழித் தொகை. னிலைத்த நீரையுடைய கடல் என விரியும். கடலிடத்து
நின்று நீரைப் பருகிக் கறுத்து எழுந்து படர்ந்த முகில் எனச் சில சொற் பெய்துரைக்க.
கால்-இடம். திக்கு நிலை-திக்காகிய நிலைக்களங்கள் என்க. முகிலகிய பாசடை என்க.
3-5:
இடை.....................வனப்பும்
(இ-ள்) இடை இடை
உகளும்-இடையிலே இடையிலே இயங்குகின்ற; மீனும் மீனும்-நாள்மீனாகிய மீன்களையும்;
செம்முகில் பழநுரை வெள்முகில் புது நுரை எங்கு சிதறி-சிவந்த முகிலாகிய பழைய நுரைகளையும்
வெள்ளை முகிலாகிய புதிய நுரைகலையும் தன்னிடமெங்கும் சிதறி; பொங்கி எழு வனப்பும்-மிகுந்து
எழாநின்ற அழகினையும் என்க.
(வி-ம்.)
வினை முதலல்லாத கருவி முதலாயின அவ்வினை முதல் வினைக்குச் செய்விப்பனவாம் ஆதலின்
சிதறி எனச் செய்விப்பதாகக் கூறினார்.
வேய்தந்த வெண்முத்தஞ்
சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்தவானகமானும் சிலம்ப (திருக்கோவை. 130. உரை) |
என்றாற் போல பழையநுரை
சிவந்திருத்தலால் அதற்குவமையாகச் செம்மேகம் என்றாள். வனப்பு-அழகு.
|