|
6-8: பலதலை.......................வாவிக்குள்
(இ-ள்) பலதலை வைத்து
முடியாது-ஓரிடத்திற் சென்றமையாது பல இடங்களினும் சென்று; எங்கு பாயும் முகம் வைத்த-எவ்விடங்களிலும்
பரவும் எண்ணிறந்த பாயும் முகங்களைக் கொண்ட; கங்கைக்காலும்-கங்கையாகிய வாய்க்கால்களையும்;
கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்-தன்பாற் கொண்ட குளிர்ச்சி மிகுந்த வானமாகிய
குளத்திற்குள் என்க.
(வி-ம்.) முகிலாகிய
இலைகளையும் மீனாகிய மீன்களையும் செம்முகில் வெண்முகில் ஆகிய பழைய புதிய நுரைகளையும்
கங்கையாகிய வாய்க்காலையும் உடைய வானமாகிய குளத்தினுள் என்க.
9-12:
முயல்......................தாமரையே
(இ-ள்) முயல் எனும்
வண்டு உண-முயலாகிய வண்டு பருகும்படி; அமுத நறவு ஒழுக்கி-அமுதமாகிய தேனைச் சிந்தி; தேவர்
மங்கையர் மலர் முகம் பழித்து-தெய்வ மகளிர்களின் மகிழ்ச்சியால் மலர்ந்த முகங்களைப்
பழித்து; பாண்டில் குறையா வெண்மையின் மலர்ந்த மதித்தாமரையே-வட்டம் குறைதலில்லாத
வெண்மை நிறத்தோடு இருந்த திங்கள்மண்டிலமாகிய வெண்டாமரையே! என்க.
(வி-ம்.) மலர்முகம்:
வினைத்தொகை; மலர்ந்த முகம் என்க. பாண்டில்-வட்டம். மதித்தாமரை: பண்புத்தொகை.
12-13:
மயங்கிய.........................ஒன்றுள
(இ-ள்) மயங்கிய
ஒருவேன்-வருத்தமுடைய ஒருத்தியாகிய யான்; நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள-நின்னிடத்தே
வினவும் அன்பு மொழி ஒன்று உளது அஃதியாதெனில் என்க.
(வி-ம்.) ஒருவேன்-ஒருத்தியாகிய
யாங் அளிமொழி-அன்புமொழி. ஒன்றுள: பன்மை ஒருமை மயக்கம். இனி உளது என்பது ஈறுகெட்டதெனினுமாம்.
14-16:
மீன்.......................பொதும்பரில்
(இ-ள்) திரை இடைமீன்
பாய்ந்து மறிக்க-அலகளிடத்தே மீன்கள் பாய்ந்து தடுக்க; வளை மயங்கி சுல் வயிறு உளைந்து
கிடந்து முரலும்-சங்கு மயக்கமுற்றுச் சூலுடைய வயிறு நொந்து கிடந்து முழங்கும்; புன்னையம்
பொதும்பரில்-புன்னைமரச் சோலையிலே என்க.
|