|
(வி-ம்.) மறிக்க-குதிக்க
எனினுமாம். உளைந்து-வருந்தி. வளை-சங்கு. முரலுதல்-முழங்குதல். பொதும்பர்-சோலை.
16-23:
தம்முடை..........................கரியாக
(இ-ள்) தம்முடைய
நெஞ்சமும்-எம்பெருமான் தம்முடைய மனமும்; மீன் உணவு உள்ளி இருந்த வெண் குருகு என-மீனாகிய
தன் இரையை நினைந்து அது வருமளவும் பார்த்திருந்த வெண் கொக்குப் போல; சோறு நறை
கான்ற கைதையம் மலரும்-வெண் சோற்றினையும் தேனையும் சொரிந்த தாழை மலரும்; பலதலை
அரக்கர் பேரணி போல-பலவாகிய தலையினையுடைய அரக்கர் படைக்கு வகுத்த பெரிய அணியைப்போன்று;
மருங்கு கூண்டு எழுந்து-பக்கத்திலே திரண்டெழுந்து; கருங்காய் நெருங்கி விளை கள் சுமந்த
தலைவிரி பெண்ணையும்-கரிய காய்கள் மிடைந்து விளைந்த கள்ளைச் சுமந்த தலையின்கண்
மடல் விரிந்த பனைகளும்; இன்னுங் காணக் காட்சி கொண்டிருந்த அன்னத் திரளும்-யாம்
இப்பொழுதும் காணும்படி நமக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்ற இவ்வன்னக் கூட்டமும்;
பெருங்கரியாக-சிரந்த சான்றுகளாகவும் என்க.
(வி-ம்.) தம்முடைய
என்றது எம்பெருமானுடைய என்றவாறு. குருகு-கொக்கு. சோறும் நறையுங் கான்ற என்க. தாழம்பூவினுள்
அமைந்த மகரந்தத்தைச் சோறு என்றல் மரபு. நறை-தேங் கைதை-தாழை. தாழை மலருக்கு ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் வெண்கொக்கு உவமை. பனைக் கூட்டத்திற்கு அரக்கர்
பேரணி உவமை. பனையின்கண் காய்கள் நெருங்கிக்கிடத்தல் பல தலைகட்கு உவமை. கூண்டு-கூடி.
பெண்ணை-பனை. தலைவி இது கூறுங்கால் அன்னத்திரள் கூடி இருத்தலின் யாம் இன்னும் காணும்படி
இதோ காட்சி கொண்டிருந்த அன்னத்திரளும் என்றாள். பெருங்கரி-சிறந்த சான்று. பெருமை-ஈண்டுச்
சிறப்புப் பண்பினைக் குறித்தது.
24-26:
சொல்லா..............................இன்று
(இ-ள்) உயிரெ உற
சொல்லா இன்பமும் தந்து-என் உயிர் தளிர்க்கும்படி இவ்வாறு இருந்ததென்று பிறர்க்குச்சொல்லிக்
காட்ட வொண்ணாத பேரின்பத்தையும் வழங்கி; நாள் இழைத்து இருக்கும் செயிர் கொள்
அற்றத்து-என் சுற்றத்தாருணராதபடி இருவகைக் குறியும் செய்து எதிர் பார்த்திருக்கும்
யான் பெரிதும் துன்புறுதற்குக் காரனமான இவ்விரவுக் குறியாகிய செவ்வியிலே; மெய்யுறத்
தனந்த பொய்யினர்-உண்மையாக வந்ததுபோல வந்து பிரிந்த பொய்ச் சுளினையுடையார்;
இன்று-இற்றை நாளிலே என்க.
(வி-ம்.) 16-26.
புன்னைப்பொதும்பரில் தம்முடைய நெஞ்சமும் கைதைய மலரும் பெண்ணையும் அன்னத்திரளும்
கரியாக உயிருற
|