பக்கம் எண் :

மூலமும் உரையும்187



இன்பமுந் தந்து நாள் இழைத்திருக்கும் செயிர்கொள் இவ்வற்றத்துத் தணந்த பொய்யினர் என இயைத்துக் கொள்க. எம்பெருமன் என்னைக் கூடிய காலத்தே சான்றாவார் வேறியாருமிலர், அவர் நெஞ்சமும் இத்தாழை மலரும் இப்பனைகளிம் அன்னத்திரளுமே சான்றாம் என்றவாறு. இத்னோடு

“யாரும் இல்லத் தானே கள்வன்
 தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
 தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
 ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
 குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே” (குறுந். 25)

எனவரும் குறுந்தொகைச் செய்யுளையும் ஒப்புக்காண்க. சொல்லா இன்பம்-காமவின்பம். “சொன்னலங் கடந்த காமவின்பம்” என்றார் கம்ப நாடரும்.

     “ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூரப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருளாதலின்” எனவரும் நச்சினார்க்கினியர் நல்லுரையும் ஈண்டு நினைக, (தொல். பொருள். சூ. க. உரை); நாள்-ஈண்டு நாளிடத்தே செய்யும் இர்வகைக் குறிகளும் என்க. செயிர்-துன்பம். அற்றம்-செவ்வி. பிரியேன் பிரியின் ஆற்றேன் என்றது பொய்த்தனர் என்பாள் பொய்யினர் என்றாள்.

     இனி, 27 ஆம் அடி நெடுமாலை என்பது தொடங்கி 60 பெருமான் என்பது வரையில் இறைவனுடைய இன்பக்கூத்தினை நுதலிவந்த ஒரு தொடர்.

27-30: நெடுமாலை...............................விசிப்ப

     (இ-ள்) நெடுமலைபெற்ற ஒரு மகள் காண-நெடிய இமயமலை ஈன்ற ஒப்பற்ற மகளாகிய பார்வதியார் கண்டு மகிழ; நான்முக விதியே தாளந் தாக்க-நான்கு முகங்களை யுடைய படைப்புக் கடவுள் முறைப்படி தாளம் போடவும்; அந்த நான்முகனை உந்தி பூத்தோன்-அந்த நன்முகனைத் தனது திருவுந்தியிற் படைத்தவனாகிய திருமால்; பாசத்து விசித்து மிறை இடக்கை இசைப்ப-கயிற்றினால் பிணித்து வளைந்த இடக்கை என்னும் தொற் கருவியை முழக்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) முன்னர் நான்முகன் தாலந்தாக்க என்றாராகலின் அந்த நான்முகனை என்று சுட்டினார். உந்தி பூத்தோன் என்றது திருமாலை. பாசத்து விசித்து என மாறுக. மிறை-வலைவு. “விண்ணிட மன்னர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே” என்புழியும் (சீவக சிந். 184) அஃதப்பொருட்டாதல் உணர்க. இடக்கை-ஒருவகைத் தோற்கருவி. இதனை ஆமந்திரிகை என்று கூறுதலு முண்டு. இதனை, “முழவொடு கூடி நின்றிசைத்து ஆமந்திரிகை” எனவரும் சிலப்பதி]