பக்கம் எண் :

188கல்லாடம்[செய்யுள்21]



காரத்திற்கு (3. 141-142) அடியார்க்குநல்லார் கூறும் உரையிலும் காண்க.

31-34: மூன்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,இரட்ட

     (இ-ள்) மூன்று புறத்து ஒன்றில்-முப்புறங்களுள் வைத்து ஒருபுறத்தினுள்; அரசு உடைவாணன் எழுகடல் கிளர்ந்த திரள்களி அடங்க-அரசாட்சி செய்யும் வாணாசுரன் ஏழுகடலின்றும் எழுந்த பெருகிய திரண்ட ஆறாவாரங்கள் அட்ஙகிப்போடும்படி; முகம்வேறு இசைக்கும்-தனது ஐந்து முகங்களும் வெவ்வேறு ஓசையாக முழங்கும்; குடமுழவு-குடமுழாவென்னும் தோற்கருவியினை; மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடு இரட்ட-மேருமலை ஆயிரங்கிளைகள் வி்ட்டாற்போன்ற தன்னுடைய ஆயிரங் கைகளாலும் முழுக்காநிற்கவும் என்க.

     (வி-ம்.) வாணன் கடவொலி அடங்கும்படி குடமுழாவினை முழக்க என்றவாறு. வாணன்-வாணாசுரன். கலி-ஆரவாரம் குடமுழா-ஐந்து முகங்களையுடைய ஒரு தோற்கருவி. இரட்டுதல்-முழக்குதல் வாணாசுரனுடைய தோள்களுக்கு மேருமலையின் கிளைகள் உவமை. இஃது இல்பொருளுவமை

35-39: புள்,,,,,,,,,,,,,உருக,

     (இ-ள்) புள்கால் தும்புறு-பறவைக்கால் போன்ற காலினையுடைய துன்புறு முனிவரும்; மனக்கந்திருவர்-எப்பொழுதும் ஆணும்பெண்ணுமாய் மணந்திருக்கும் கந்தருவர்களும்; நால்மறை பயனாம் ஏழ் இசை அமைத்து-நான்கு வேதத்தின் பயனாகிய ஏழு பண்களையும் முறைப்படி அமைத்துக்கொண்டு சருக்கரைக்குன்றில் தேன்மழை நான்றென-சருக்கரையாகிய மலையின்மேல் தேனாகிய மழைபெய்தாற்போலே; ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்-அத்திரி முதலிய ஏழு முனிவர்களும் வணங்கும் தவப் பெருமையுடைய சிறந்த தவத்தினை யுடையோரெல்லாம்; அன்பினர் உள்ளமொடு என்புகரைந்து உருக-அன்புடையோராய் உள்ளமும் என்பும் கரைந்து உருகி நிற்ப என்க.

     (வி-ம்.) ஏழிசை-குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளறி, தாரம் என்பன. நாலுதல்-வீழ்தல். ஏழுமுனிவர்-அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், கமதக்கிநி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் என்னுமிவர்.

40-44 விரல்............காட்டாது

     (இ-ள்) விரல் நான்கு அணி அமைத்த-நான்கு விரலும் அணியாக அமைக்கப்பட்ட; குரல் வீங்காது-மிடறு