பக்கம் எண் :

மூலமும் உரையும்189



வீங்காமலும்; நால்மறை துள்ளும் வாய்பிளவாது-நான்கு மறைகளும் முழங்குதற்கிடனான வாயினைப் பெரிதும் அங்காவாமலும்; உள்காட்டி உணர்த்தும் நோக்கம் ஆடாது-உள்ளக்கருத்தினை மெய்ப்பாடாகக் காட்டி உணர்த்தும் கண்ணிமைகள் ஆடாமலும்; பிதி்ர் கனல்மணி சூழ் முடி நடுங்காது-சிதறிய தழல்போன்ற மணி சூழப்பட்ட முடியணிகலனையுடைய தலையினை அசையாமலும்; வயிறு குழிவாங்கி-வயிறு குழியும்படி எக்கி; அழுமுகம் காட்டாது-அழுதாற்போலும் முகம் காட்டாமலும் என்க,

     (வி-ம்.) விரல் நான்கும் எனல்வேண்டிய முற்றும்மை தொக்கது. குரல்-ஈண்டு மிடறு. காட்டி உள்ளுணர்த்தும்-உள்ளக் கருத்தினை மெய்ப்பாடாகக் காட்டி உணர்த்தும் என்க. நோக்கம்-கண். முடி-முடிக்கலனையுடைய தலை. குழிவாங்கி-குழிய எக்கி. அழுமுகம்-அழும்பொழுது தோன்றும் முகம்.

“கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா
 பண்ணளவும் வாய்தோன்றா பற்றெறியா-வெண்ணிலவை
 கள்ளார் நறுந்தெறியற் கைதவனே கந்தருவ
 ருள்ளாளப் பாட லுரை”

எனவும்,

“இடையினோ டேனைப் பிங்கலை யியக்க
     மிகந்துமூ லந்தொடுத் தியக்கி
நடுவுறு தொழிலாற் பிரமரந் திராந்த
     நடைபெற விசைக்குமுள் ளாளம்
மிடறுவீங் காள்கண் ணிமைத்திடா ளெயிறு
     வெளிப்படாள் புருவமே னிமிராள்
கொடிறதுட துடியாள் பாடலு மதுகேட்
     டனை வழங் குதூகல மடைந்தார்” (திருவிளையாடற். இசைவாது. 31)

எனவும்,

“வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ்
செயிரறு புருவ மேறல் சிரநடு்க் குறல்கண் ணாடல்
பயிரறு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல்
எயிறுது காட்ட லின்ன உடற்றொழிற் குற்ற மென்ப”
                             (திருவிளையாடற். விறகு 29)

எனவும் வரும் இவற்றால் உடற்றொழிற் குற்றங்களை உணர்க.

45-49: நாசி...........மாற்றி

     (இ-ள்) நாசி-நாசிப்பாட்டும்; காகுளி-காகுளிப்பாட்டும்; வெடிகுரல்-வெள்ளோசையும்; பேசாக் கீழிசை-நிறமுதலியன