|
எழுந்தொலியாத கீழிசையும்;
ஒருபுறம் ஒட்டல்-ஒருபுறம் ஒட்டலும்; நெட்டுயி்ர்ப்பு எறிதல் எறிந்து நின்று இரட்டல்-நெட்டுயி்ர்ப்
பெறிந்தாற்போல எறிந்து நின்று இரட்டலும; ஓசை இழைத்தல்-ஓசை இழைத்தலும்; கழிபோக்கு
என்னப் பேசுறு குற்றம்-கழிபோக்கும் என்று சொல்லப்பட்ட இக்குற்றங்களையும்; அசைவொடு
மாற்றி-சோம்பலையும் ஒருசேர விலக்கி என்க.
(வி-ம்.) நாசிப்பாட்டு-ஒரு
தானத்தே பாட ஒரு தானத்தே நழுவுவது. தானம்-நெஞ்சு முதலியன. காகுளி-பேய் கத்தினாற்போற்
பாடுவது. ெவெடிகுரல் வெள்ளை-வெடித்த குரலாகிய நிறமில்லா வெள்ளோசை. நிறம்-
மாத்திரைக
ளொன்பானுந் தானங்க ளெட்டானு
மேத்துங் கிாயையொன் றிரைந்துங்-கோத்துப்
பதியயயன்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின்
மதியோக ளைந்துநிற மாம் |
என்பதனானறிக. கீழிசை-நிறமுந்தானமுங்குறையும்
தட்டை இசை ஒருபுறமோட்டல்-பாடு நிறத்தை யொதுக்கிப் பாடுதல். நெ்டுயி்ாப் பெறித
வெறிந்துநின் றிரட்டல்-ஒருபு பண்ணைப்பாட வேறொரு பண்ணிலே வில்ங்கி நின்னறிரட்ல்,
ஓசையிழைத்தல்-காகங் கத்தினாற் போற் பாடுவது. கழிபோக்கு-ஓரோசையான தன்மை நீங்கிப்
பல வோசையாய் வருதல், அசைவு-மடி.
பெருங்குரல்
கட்டை நழுவல் விலங்க
லொருக்கி யொதுக்கம் புரைத்தல்-விருப்பிலாக்
காகுளி காக சுரமென்னு மிவ்வெட்டு
மாகாவெனச் சொன்னா ராய்ந்து |
என்றா ரிசைமரபுடையார்.
இதனோடு,
வெள்ளைகா குளிகீ
ழோசை வெடிகுர னாசி யின்ன
எள்ளிய வெழாலின் குற்ற மெறிந்துநின் றிரட்ட லெல்லை
தள்ளிய கழிபோக் சோசை யிழைத்தனெட் டுயி்ர்ப்புத் தள்ளித்
துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவும் தீர்ந்தே
(திருவிளைாயடற். விறகு. 30.) |
எனவரும் பாவினையும்
ஒப்பு நோக்கு.
50-54:
வண்டின்.....................விதியொடு
(இ-ம்.) வண்டின் தாரியும்-வண்டின்
முரற்சியும்; கஞ்சநாதமும்-கஞ்சக்கருவியின் ஒலியும்; வலம்புரி சத்தமும்-வலம்புரிச்சங்கின்
முழக்கமும்; சிரல்-மீன்கொத்திக் குருவியும்; வான் நிலையும்-வானம் பாடியும் என்னும்
இவை வானத்தே நிற்கும் நிலையும்; கழை இலை வீழ்வதும்-மூங்கிலின் இலை விழுகின்ற
|