|
வீழ்ச்சியும்; அருவி
ஓசையும்-அருவி விழுங்கால் எழும் ஒலியும், முழவின் முழக்கம்-குடழாவின் முழக்கமும்; வெருகின்
புணர்ச்சியும்-பூனையின் புணர்ச்சிப்பொழுதில் எழும் ஓசையும்; என்று இன்னும் இசைப்பப்
பன்னிய விதியொடு-என்றும் மேலும் பாடுதற்கு வகுத்துக்கூறிய ஓசை முதலிய சிறந்த விதிகளோடே
என்க.
(வி-ம்.) தாரி-முரற்சி.
கஞ்சம்-கஞ்சக்கருவி, சிரல்-மீன் கொத்திக்குருவி, வாள்: ஆகுபெயர். வானம்பாடி.
இனிச், சிரல் வானிடத்தே நிற்கும் நிலையும் எனினுமாம். வெருகு-பூனை, இசைப்பப்பன்னிய-பாடற்குக்கூறிய.
விதி-முறை, உத்தமமான இசை-குயிலோசையும் வண்டினாதமும் வலம்புரிச் சத்தமுமென்க.
துய்யமொழி
மென்குயிலுஞ் சோலைவரி வண்டினமும்
வைய முழங்கும் வலம்புரியுங்-கைவைத்துத்
தும்புருவு நாரதரும் பாடியமூ வோசையென
நம்புநீர் நால்வேதத் துள் |
என்றா ரிசைமரபுடையவர்.
பாடுந்தொழிற் கிரியையாவன:-
கிச்சிலி பூனை
குடமுழக்கஞ் செம்மைத்தா
முச்சிமலை நீர் விழுக்கா டொண்பருந்து-பச்சைநிற
வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை
யேயுங்கா லோசை யியம்பு |
என்பதனா னறிக. இசையுந்
தொழிலும் பகுத்தறியக் கிடத்தலினுய்த்துணர் நிரைநிரை. இன்னுமென்றதனால் வானம்பாடி
பருந்து முதலியன கொள்க. வெருகின் புண்ாச்சி: அன்மொழித்தொகை, உறுமுதலைக் குறித்தலி்னின்.
பன்னுதல் பன்னென வினைமாத்திரையாய் நின்றது. இயலுதல்-பொருந்துதல்.
இதனோடு
எழுதுசித் திரம்போன்
மன்னி யிழுமெனு மருவி யோதை
முழவொலி கஞ்ச நாதம் வலம்புரி முரலு மோசை
கொழுதிசை வண்டின் றாரி யெனவிசைக் குணனும் வேரல்
விழுமிலை சிரன்மீன் மேல்வீழ் வீழ்ச்சிபோற் பாடற் பண்பும்
(திருவிளையாடற்.
விறகு, 31.) |
எனவரும் பாவினையும்
ஒப்புநோக்குக..
55-60:
மந்தரம்...............பெருமான்
(இ-ள்) மந்தரம்
மத்திமை தாரம் என்று இவை மூன்றின்-படுத்தல், சமன், எடுத்தல் என்னும் இம்மூன்று இடங்களில்
அமைத்து; துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்-துள்ளலும் தூங்கலும் தெளிவுடைத்தாய்
மெலிதலும் ஆகிய இவ்வோசை விகற்பங்களோடே; கூடிய கானம்-பொருந்திய இசைப்பாட்டினைப்பாடி;
அன்பொடு பரவ-அன்போடே வாழ்த்தா
|