பக்கம் எண் :

192கல்லாடம்[செய்யுள்21]



நிற்பவும்; பூதம் துள்ள-பூதக்கூட்டங்கள் மகிழ்சியால் துள்ளா நிற்பவும்; பேய் கை மறிப்ப-பேய்க் கூட்டங்கள் கைவிதிர்த்துக் கொண்டாடா நிற்பவும்; எங்குள உயிரும் இன்பம் நிறைந்து ஆட-எல்லாவுலகங்களிலும் உள்ள உயிர்க்கூட்டங்கள் உள்ளத்தே இன்பம் நிறைதலாலே கமிழ்ந்து ஆடாநிற்பவும்; நாடக் விதியோடு ஆடிய பெருமான்-கூத்திற்கமைந்த இலக்கண முறையோடே திருக்கூத்தாடியருளிய இறைவனும் என்க.

     (வி-ம்.) மந்தரம் மத்திமை தாரம் என்பன நிரலே நீட்டலும் சமநிலையும் குறுக்கலும் ஆகிய இசை விகற்பங்கள். “நீடவும் குறுகவும் நிவப்பவும் துக்கிப் பாடிய புலவர்” என்றார். வெண்பாமலையினும். துள்ளல் தூங்கல் மெலிதல் இவை இசைவிகற்பங்கள். கானம்பாடி என ஒரு சொல் வருவித்தோதுக. தும்புறுவும் கந்தருவரும் ஏழிசை யமைத்திஉ நான்றென உருகவும் குற்றம் அசைவொடும் மாற்றி இசைப்பப் பன்னிய விதியொடு மூன்றில் கூடிய கானம்பாடி அன்பொடு பரவ என இயைத்துக் கொள்க. இறைவன் இன்பக் கூத்தாடுங்கால் உயிரினங்கள் எல்லாம் உள்ளத்தே இன்பம் நிறைதலாலே களித்து ஆடின என்பது கருத்து. நாடகவிதி-கூத்திலக்கணம்.

61-61: மதுரை................................நீங்கினர்

     (இ-ள்) மதுரை மாநகர் செழியன் ஆகிய-மதுரைமா நகரின்கண் பாணடியமன்னன் ஆகி; கதிர்முடி கவித்த இறைவன்-சடைமுதலிய கரந்து ஒளியுடைய முடியணிகலனணிந்து அருளாட்சிசெய்த சொமசுந்தரக்கடவுளும் ஆகிய இறைவனுடைய; மாமணிக்கால்-மாணிக்கத் திருவடிகளை; தலைக்கொள்ளாக் கையினர்போல-தலைமேற் கொண்டு தொழாத சிறியோர்போல; நீங்கினர்-தம்மொழுக்கத்திற்குச் சான்றாவார் பிறர் இல்லை என்று கருதி இப்பொழுது என்னைப் பிரிந்தனர் என்க.

     (வி-ம்.) ஆடிய பெருமானாகிய இறைவன் எனக் கூட்டுக. செழியன்-பாண்டியங் கையினர்-சிறுமையுடையோர். நீங்கினர் என்றது தம்மொழுக்கத்திற்குத் தம்முடைய நெஞ்சமும் கைதைய மலரும் பெண்ணையும் அன்னத்திரளும் கண்கூடாகக் கண்டிருந்த கரிகளாகவும் இப்பொழுது கரியாவார் யாரும் இலர் என்று கருதி நீங்கினர் என்பதுபட நின்றது.

64-66: போக்கும்...............................வணங்குதுமே

     (இ-ள்) போக்கும் ஈங்குழி வருவதும் கண்டு-பிரிவும் இவ்விடத்து வருவதும் ஆராய்ந்து தெளிந்து; அது உறுதியாயின்-அத்தெளிவினை எமக்குச் சொல்லுவாயானால்; நின்கால் எண்தக போற்றி வணங்குதும்-நின்னுடைய திருவடிகளை எம் உள்ளத்தில் தகுதியாக நினைத்து வனங்கா நிற்போம் என்க.