பக்கம் எண் :

மூலமும் உரையும்193



     (வி-ம்.) போக்கு-பிரிவு. ஈங்குழி-இவ்விடம். எண்தக-எம்கருத்திற்கேற்ப எனினுமாம். வணங்குதும்-வணங்குவோம்.

     னின், மதித்தாமரையே ஒருவேன் நின்பால் கேட்கும் மொழி ஒன்றுளது; அஃதாவது-பொய்ச்சூளுரைத்தார் தம்நெஞ்சமும் மலரும் பனையும் அன்னக்கூட்டமும் சான்றாக இளமரக்காவில் இன்பமும் தந்து சான்றாவார் யாரும் இல்லை என்று நீங்கினர். அவர் போக்கும் வரவும் நீ கண்டு எமக்குக் கூறுதியாயின் நின்கால் போற்றி வணங்குதலும் என வுனைமுடிவு செய்க மெய்ப்பாடும் பயனும் அவை.