பக்கம் எண் :

204கல்லாடம்[செய்யுள்22]



ரும் மெய்பெற உறவு கலந்து இரண்டு திருமகள் போலக் கூடி ஊசல் உதைத்தும், இறால் விழ எறிந்தும், அருவி ஏற்றும், மலையொடு கூவியும். நீலங்கொய்தும், இதணிற் பொலிந்தும் கிளி கடிகுவீர். இங்ஙனம் நீவிர் விளையாடுதலால் கூடலம் பதியில் இருந்தோன் தாள்பெற்றவர் எய்திய பெரிய திரு இன்பமும் ஏனைய நலங்களும் விளைக்குமாறு போலவே விளையும் இன்பமும் நலமும் சொல்லில் அடங்குவன அல்ல காண்; என்று இயைத்துக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.