|
னால் பொய், களவு,
பிறர்மனை நயத்தல், அழுக்காறு, வெகுளி, வழிபடாமை, மாசுண்டல், செற்றம், கோட்டம்
என்னும் ஏனைத் தீவினைகளையும் கூறிக் கொள்க. இனி இத்தீவினைகளை மரங்களாக உருவகித்தலின்
முண்மரங்கள் என்று கொள்க. பவம்-பிறப்பு. கொலை முதலிய மரங்களை வெட்டித்தள்ளிக்
கொல்லாமை முதலிய பயன் மரங்களை நட்டு என்றும், பவச்சுவர் இடித்து எனவே பிறவாமை
என்னும் சுவரை வைத்து எனவும் கொள்க. அன்பு ஆகிய பொற்றகடு வேய்ந்து என்க. அவனருளாலே
அவன்றாள் பெறுதல் வேண்டுமாதலின் இச்செயலெல்லாம் இஐவன் செயலாகவே கூறப்பட்ட.ன.
ஞானிகட்கு இறைவன் யாண்டும் வெளிப்பட்டுத் தோன்றுதலால் யான் பாங்குடன் கானத் தோன்றி
எனப்பட்டது.
48-51:
பன்மலர்................................போல
(இ-ள்) பல்மலர்
சோலை விம்மிய பெருமலர்-பலவாகிய பூஞ்சோலைகளிலே மலர்ந்த நறிய மலர்கள்; இமையோர்
புரத்தை நிறை மணங்காட்டும்-வானுலகத்தினும் சென்று நிறைந்து கமழும் நறுமணத்தைத் தோற்றுவித்தற்கு
இடனான; கூடல் அம்பதியகம்-நான்மாடக் கூடலாகிய மதுரையம் பதியினிடத்தே; வீடுபெர
இருந்தோன்-தன்னைக் கண்டு வணங்கிய அன்பர்கள் வீட்டுலகத்தைப் பெறுதற் பொருய்யு
வீற்றிருந்தவனுடைய; இருதாள் பெற்றவர்-இரண்டு திருவடிகளையும் அடைந்தமெய்யடியார்; பெறும்
திருப்போல-பெறுகின்ற பெருஞ் செலவம் இன்பத்தோடு ஏனை நன்மைகளையும் விளைத்தாற்போல
என்க.
(வி-ம்.) சோலையில்
மலர்ந்த மலர்கள் இமையோர் நகரத்திலும் சென்று நிறைந்த மணத்தை காட்டுதற்கு இடனான
கூடலம்பதி என்க. கூடலம்பதியில் இருந்தவனாகிய இறைவனுடைய இருதாள் பெற்றவர் பெற்ற
திரு என்க. பொன்மலர்ச்சோலை என்றும் பாடம். இப்பாடத்திற்குக் கற்பகச் சோலையினின்றும்
மலர்களைக் கொணர்ந்து இந்திரன் மதுரையில் வழிபட்டமையாலே இமையோர் புரத்தை நிறைக்கும்
கற்பகமலர் மணத்தை தன்னிடத்தே காட்டும் கூடலம்பதி என்று பொருள் கொள்க. பீடுபெற
இருந்தோன் என்றும் பாடம்.
52-53:
மருவிய................................அமராது
(இ-ள்) மருவிய பண்ணை
இன்பமொடு-இவ்வாறு பொருந்திய விளையாட்டின்பமோடு; விளைநலம்-மேலுமுண்டாகும் நன்மைகள்;
சொல்லுடன் அமராது-சொல்லுதற்கு அமையாது என்க.
(வி-ம்.) மருவிய பண்ணை
சொல்லுடன் அமராது என்றது சொல்லால் சொல்லிக் காட்டும் அளவிற்றன்று என்றவாறு.
இனி நுதலினையுடையாய் உன்னை யான் என் தோழியாகக் கருதிய அறிவு கிடக்க நீ ஒருகணம்
ஈங்கு மருவுவையாயின் நீராடச் சென்ற என் தோழியும் இப்பொழுது இங்கு வருவள். அவள்
வந்ததும் நீவிர் இருவீ
|