|
பரணின்மேல் ஏறி இருத்தலே
ஒரு விளையாட்டாகலின் நெட்டிதண் பொலிந்தும் என்றாள். இதண்-பரண். குரல்-கதிர்.
அறையும்-ஆரவாரிக்கும். கடிதல்-ஓட்டுதல்.
40-42:
வெள்ளி...........................இறைவன்
(இ-ள்) ஒருநாள் திருநகை
வெள்ளி இரும்பு பொன்எனப் பெற்ற மூன்று புரம்-ஒரு காலத்தே தனது அழகிய நகைப்பினாலே
வெள்ளியாலும் இரும்பாலும் பொன்னாலும் தனித்தனியே இயற்றப்பட்டவை என்று கூறப்பெற்ற
முப்புரங்களும்; வேவ விளையாட்டுக் கண்ட பெருமான் இறைவன்-ஒருசேர வெந்தழியும்படி திருவிளையாடல்
செய்தருளிய சிவபெருமானாகிய கடவுள் என்க.
(வி-ம்.) வெள்ளி
இரும்பு பொன்னென என்புழி எண்ணும்மை தொக்கன. மூன்று புரமும் எனற்பால முற்றும்மை தொக்கது.
நகை-நகைப்பு. பெருமாணிறைவன் என்றது பெருமானடிகள் என்றாற் போல நின்றது. இப்பகுதியிலும்
முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க.
43-44:
மாதுடன்.......................நடந்து
(இ-ள்) பேணா உள்ளம்
காணாது நடந்து-தன்னை விரும்பாத நெஞ்சங்கள் காணாமல் மறைந்து சென்று; என்மனம் மாதுடன்
ஒன்றி புகுந்து-அடியேனாகிய என் நெஞ்சத்திலே அங்கயற்கண் அம்மையாரொடு பொருந்திப்
புகுந்து வீற்றிருந்து என்க.
(வி-ம்.) காணாமல்
மறைந்து சென்று என்க. மாது-அங்கையற்கண் அம்மை ஒன்றி-சேர்ந்து.
45-47:
கொலை................................உண்ணின்று
(இ-ள்) கொலை களவு
என்னும் பழுமரம் பிடுங்கி-கொலையும் களவும் முதலிய தீவினையாகிய பழுமரங்களைச் சாய்த்து;
பவச்சுவர் இடித்து-பிறப்பாகிய சுவரை இடித்துத் தள்ளி; புதுக்கக் கட்டி-கில்லாமை முதலிய
மரங்களை நட்டுப் பிறவாமையாகிய சுவரை வைத்துப் புதுவதாகாக் கட்டி; அன்பு கொடு வேய்ந்த
நெஞ்ச மண்டபத்து-அருளாகிய பொற்றகடு கொண்டு வேய்ந்த உள்ளமாகிய மண்டபத்தின்கண்;
உள்நின்று பாங்குடன் காணத் தோன்றி-அகத்தே வீற்றிருந்து யான் புறத்தேயும் யாண்டும்
காணும்படி வெளிப்பட்டுத் தோன்றி என்க.
(வி-ம்.) இனி, தலைமை
பற்றிக் கொலையும் களவுமே கூறினாரேனும் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல் என்னும்
உத்தியிலே
|