|
(வி-ம்.) தேனொடு என
உருபினைத் தேனொடுங் கூட்டுக. கருங்கால் செம்மணி என்புழிச் செய்யுளின்பம் உணர்க.
கருங்கால் என்றது கவணின் பக்கக் கயிறுகளை. அவை மயிரால் திரிக்கப் பட்டமையின்
கருங்கால் எனப்பட்டது. இறால்-தேன்கூடு. குறி-இலக்கு.
35-37:
வெண்டுகில்....................கொய்தும்
(இ-ள்) வெள்துகில்
நுடங்கி பொன் கொழித்து இழியும் அருவி ஏற்றும்-வெள்ளைத்துகில் போல அசைந்து பொன்னை
வரன்றிக் கொண்டு வீழுகின்ற அருவி நீரை மெய்யின்கண் ஏற்று ஆடுவதனாலும்; முழை மலை
கூஉயும்-முழையினையுடைய மலைக்கெதிர் நின்று எதிரொலி உண்டாகும்படி கூவுதலானும்; பெருஞ்சுனை
விழித்த நீலம் கொய்தும்-பெரிய சுனையினிடத்தே மலர்ந்துள்ள நீல மலர்களைக் கொய்வதனாலும்
என்க.
(வி-ம்.) துகில்நுடங்கு
என்புழி உவம உருபு தொக்கது. வெண்டுகில் அருவிக்கும் நுடங்குடல் அதன் வீழ்ச்சிக்கும்
தொழிலுக்கும் பண்பும் பற்றி வந்த உவமைகள். முழை-குகை. மலைக்கெதிர் கூவுதல் எதிரொலி
கேட்டு இன்புறுதற் பொருட்டு. இனி மலை முழையருகே நின்று கூவுங்கால் அம்முழையினின்றும்
எதிரொலி எழும் என்பதனை,
| |
பிறந்த
தமரிற் பெயர்ந்தொரு பேதை
பிறங்கால் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியாள்
வந்த நெறியு மறந்தேன் சிரந்தவர்
எஎயோஓவென் றேலா அவ்விளி
அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துச்
செ;ல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை
மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடந்தை
வாழ்த்துவப்பான் குன்றின் வகை; (பரி.
19; 58-66) |
எனவரும் பரிபாடலிலும்
காண்க. விளித்த நீலம் என உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருண்மேல் வுனை புணர்ந்தமையால்
இது சமாதி என்னும் அணி. நீலம்: ஆகுபெயர்.
38-39:
கொடு.........................கடிந்தும்
(இ-ள்) கொடுமரம்
பற்றி நெடு இதண் பொலிந்தும்-பழுமரத்தினைப் பற்றிக்கொண்டு நெடிய பரணின்கண் ஏறி
இருந்து பொலிவுறுவதாலும்; குரல்தினை அரையும் கிளி கணம் கடிந்தும்-கதிரினையுடைய தினையிடத்தே
வந்து ஆரவாரிக்கும் கிளிக் கூட்டத்தை ஓட்டுதலானும் என்க.
(வி-ம்.) கொடுமரம்-பரணில்
ஓருறுப்பு, இதனைப் பழுமரம் என்பர். கொடுமரம் நெட்டிதண் என்புழிச் செய்யுளின்ப முணர்க.
|