பக்கம் எண் :

200கல்லாடம்[செய்யுள்22]



ஈங்கு ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின்-இவ்விடத்தே ஒருநொடிப் பொழுது நிலை பெறப் பொருந்தி நிற்பாயாயின. இந்நிலை பெயர உன்னும் அக்கணத்தில்-பின்னர் நீ இங்ஙனம் நின்ற நிலையினின்று நீங்க நினைக்கும் அடுத்த நொடிப் பொழுதில்; ஈண்டு தூண்டா விளக்கின் அவள் உதவும்-இங்குத் தூண்டாமணி விளக்கம் ஒன்று வருமாறு போலே நீராடச் செற என் தோழியும் வந்துறுவாள் என்க.

     (வி-ம்.) வெயர் பெறுதற்குக் காரபமான அணங்கு என்க. வெயர்-வியர்வை. அணங்கு-வருத்தம். சிறிது ஆறி என ஒட்டுக. கணம்-நொடிப் பொழுது. நிலைக்க மருவுதல்-நிற்றல். உன்னும்-நினைக்கும். தூண்டா விளக்கு-மணி விளக்கு. அவள் என்றது நீராடச் சென்ற என் தோழி என்றவாறு. உதவும் என்றது வருவள் என்றவாறு.

28-32: அவ்வுழி............................உதைத்தும்

     (இ-ள்) அவ்வுழி-அங்ஙனம் அவ்ள் வந்த விடத்து; இருவீரும் மெய்யுற உறவு கலந்து-ஒருவீர் போலும் நீவிர் இருவீரும் வாய்மையாகவே உளங் கலந்து உறவாடி; இன்று இரண்டு திரு ஒருகடல் பயந்தாங்கு-இற்றைநாள் இரண்டு திருமகளிரை ஒரு பாற்கடல் பெற்றாற்போல; நெடுங்கார் வளைத்த புனத்து-நெடிய முகில் சுழ்ந்த இத்தினைப் புனத்தில்; அணிபெற மணிநிறை ஊசல் உகைத்தும்-அழகு பெறும்படி மணிகளெழுதிச் செய்த ஊசலின்கண் ஏறி இருந்து உந்தி ஆடுதலானும் என்க.

     (வி-ம்.) நீயும் என்தோழியும் ஓரிடத்திருப்பின் இரண்டு திருமகள் ஓரிடத்தில் இருந்தாற்போல அழகாகத் தோன்றுவிர் என்பது கருத்து. பின்னரும் நீவிர் ஓரூசலின்கண் இருந்து ஆடும் அழகு மிகப் பெரிதாம் என்பாள், இருவீரும் மணிநிறை ஊசல் அணிபெற உகைத்தும் என்றாள். இனி வலைத்த நெடுங்காற் புனம் என்பதற்கு வேலி இட்டு வளைக்கப்பட்ட நெடிய கரிய தினைப்புனம் எனினுமாம். ஒரு கடல் என்றது திருப்பாற் கடலை. ஒருகடல் இரண்டு திருப்பயந்தாங்கு என்புழி முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இஃது இல்பொருளுவமை. மணி-பவளம் முத்து முதலிய. உகைத்தல்-உந்துதல்.

33-34: கருங்கால்............................எறிந்தும்

     (இ-ள்) பெரும் தேனொடு இறால் குறி விழ-மிக்க தேனுடைய தேன்கூடு இலக்காகி விழும்படி; கருங்கால் கவணிடை செம்மணி வைத்து எறிந்தும்-கரிய மயிரால் அமைத்த காலினையுடைய கவணிடத்தே மாணிக்க மணியை வைத்து எறிவதனாலும் என்க.