பக்கம் எண் :

மூலமும் உரையும்199



     (வி-ம்.) (6) எந்தோழி ஒருத்தி இம்மலையில் ஒருசுனையில் ஆட அணைந்தனள் என்க. சிறந்தனவாகிய சுனைகளுள் வைத்து ஒரு சுனை என வருவித்தோதுக. கைமிகுதல்-தன்வயமின்றி மிகுதல்.

1-4: கண்ட................................விதியோ

     (இ-ள்) சேணில் கண்ட காட்சிக் குறியோ-யான் நின்னைத் தொலைவின்கண் வைத்துக் கண்டமையால் உண்டான காட்சிப் பிழையின் குறியோ, என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ-என்னுள் நிலை நில்லாத அறிவின் பிழையினாலோ; சூர்ப்பகை உலகில் தோன்றிநர்க்கு-குறிஞ்சி நிலத்தின்கண் பிறந்தவர்க்கு; அழகு விதிக்கும் அடங்கா-அழகு இயற்கை விதிக்கும் அடங்கமாட்டா; என்பது விதியோ-என்று சொல்லப்படும் ஒரு விதியுமுளதோ? யாதோ அறிகின்றிலேன் என்க.

     (வி-ம்.) சேண்-தொலைவு. மதி-அறிவு. சூர்ப்பகை-முருகங் எனவே சூர்ப்பகை உலகு என்றது முருகவேளுக்குரிய குறிஞ்சி நிலம் என்றவாறாயிற்று. “சேயோன் மேய மைவரை யுலகமும்” 9தொல். பொருள். அகத்தி) எனத் தொல்காப்பியனாரும் கூறுதல் காண்க. யான் நின்னைத் தொலைவின்கட் கண்டதனாலோ அல்லது என் அறிவுப் பிழையாலோ குறிஞ்சி நில மகளிர் அழகு ஒரு விதியின்கண் அடங்கமாட்டாது என்னும் விதியும் உண்டோ? உண்டாயின் அதனாலேயோ யாதோ யான் அறிகின்றிலேன் என்றாயிற்று. இது குறிப்பெச்சம். உலகில் ஒருவரைப்போல் மற்றொருவர் இருப்பதில்லை என்பது இயற்கைவிதி. அவ்விதி இக் குறிஞ்சி நுல மகளிர்க்குப் பொருந்தாது போலும் என்பாள் சுர்ப்பகை உலகில் தோன்றினார்க்கு அழகு விதிக்கும் அடங்கா என்பது ஒருவிதி போலும் என்றாள். என்பன விதியோ என்புழி ஒருமை பன்மை மயக்கம் என்க.

23-24: அவளே................................கிடக்க

     (இ-ள்) நீ அவளே ஆய்-தெய்வமாகிய நீ மானிடமகளாகிய என் தோழியே யாக; என் கண் குறித்த தெருமரல்-என் கண் குறித்ததனால் உண்டான தடுமாற்றத்தை; நிலைதந்த அறிவு கிடக்க-நிலையாகச் செய்த என் மயக்க அறிவு ஒருபால் இருக்க என்க.

     (வி-ம்.) ஆய்-ஆகி. நீ தெய்வமாகவும் எந்தோழி மானிடமகளாகவும் நீயிர் இருவீரும் ஒருவீர் போலவே எனக்குத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் என் அறிவு மயக்க காதலுங் கூடும். அங்ஙனமாயினும் ஆகுக என்பது கருத்து.

25-28: சிறிது............................உதவும்

     (இ-ள்) குறு வெயர் பெறும் நின் அணங்கு சிறிது ஆறி-நின் மெய்யின்கண் குறு வெயர்வை தோன்றுதற்குக் காரணமான நின்னுடைய வழிநடை வருத்தம் சிறிது தீரும்படி;