பக்கம் எண் :

246கல்லாடம்[செய்யுள்27]



தாக இருக்கும். ஆதலின் மகளிர் இடைக்கு இப்புலவர் இதனை உவமையாக எடுத்தார். இக்குளவி சுவரில் மண்ணாற் கூட்டியற்றி ஒருவகைப் பச்சைப்புழுவினைக் கொணர்ந்து அக்கூட்டில்வைத்து மூடிவிடும். அப்பச்சைப்புழுவே பின்னர்க் குளவியாக மாறிவிடுகிறது என்பது நம்முன்னோர் நம்பிக்கை. இக்குளவிக்கு வேட்டுவன் என்னும் பெயர் உண்டு என்பதனை,

“வண்டுக ளாகி மாறு மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்
 பண்டைய வுருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
 கண்டுகொள் யோனி யெல்லாங் கன்மத்தால் மாறு மென்றே
 கொண்டன சமய மெல்லாம் இச்சொல்நீ கொண்ட தெங்கே”

எனவரும் சித்தியாரினும் காண்க. இதனை ‘வேட்டுவாளி’ என்றும் வழங்குப. களைகடும் என்புழிக் கடுதல்-கலைதல். செறு-வயல்.

24-26: பண்....................................ஏற

     (இ-ள்) பண்கால் உழவர் பகடு பிடர்பூண்ட முடப்புது நாஞ்சில்-மருதப்பண்ணை பாடுதலுடைய உழவர்கள் எருது தம் பிடரிற் சுமந்த வளைவினையுடைய புதிய கலப்பைகளை; அள்ளல்புக நிறுத்தி-சேற்றில் அழுந்தும்படி நிறுத்தி வைத்துக் கலத்திற் சென்று; சுடுதலை உயர்த்தும் கடுங்குலை ஏற-நெல்லரியினைப் போர்வாக உயர்த்தியுள்ள சிறப்பினையுடைய கடிய கரையின்கண் ஏறாநிற்பவும் என்க.

     (வி-ம்.) பண்-மருதப்பண். காலுதல்-ஈண்டு வெளிப்படுத்திப் பாடுதல் என்னும் பொருட்டு.

“கண்ணெனக் குவலையுங் கட்ட லோம்பினார்
 வண்ணவாண் முகமென மரையி னுட்புகார்
 பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
 தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே”             (சீவக. 1. 51)

என்றார் திருத்தக்க தேவரும். உழவர், நாஞ்சிலை அள்ளல்புக நிறுத்தி என்க. பகடு-எருது. நாஞ்சில்-கலப்பை. அள்ளல்-சேறு. உழவர் ஏரினை நிறுத்துங்கால் கலைப்பையைச் சேற்றில் அழுத்திவைத்து நிறுத்துதல் இயல்பு. சுடு-நெல்லரி. நிலை-ஈண்டுப் போர்வு. குலை-கரை. கடுங்குலை என்றது செங்குத்தாக உயர்ந்த கரை என்றவாறு.

27-28: பைங்குவளை..................................உழக்க

     (இ-ள்) பைங்குவளை துய்க்குகம் செங்கண் கவரி நாகொடு-பசிய குவளைமலரை மேய்கின்ற சிறந்த கண்ணையுடைய எருமை தன் கன்றோடு; வெருண்டு கழைக் கரும்பு உழக்க-வெருண்டோடிக் கழையாகிய கரும்புகளை உழக்கவும் என்க.