பக்கம் எண் :

250கல்லாடம்[செய்யுள்28]



20
  வானுட்க முரற்று மலைச்சுனை குடைந்தும்
25
  பிரசமும் வண்டு மிரவிதொறு மணியும்
வயிரமும் பொன்னு நிரைநிரை கொழித்துத்
துகினான்று நுடங்கு முருவி யேற்று
மறுவறு செம்மணி காற்கவ ணிறுத்தி
நிறைமதி கிடக்கு மிறால்விழ வெறிந்து
30
  மெதிர்சொற் கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழிற் புக்கு நெடுமலை கூயு
நுசப்பின் பகைக்கு நூபுர மரற்றப்
பைங்காடு நிரைத்த வெண்மலர் கொய்து
மனத்தொடு கண்ணு மடிக்கடி கொடுபோஞ்
  செம்பொன் செய்த வரிப்பந்து துரந்து
மினைய பன்னெறிப் பண்ணை யெங்கு
மளவாக் கன்னிய ரிவரு
ளுளமாம் வேட்கைய ளின்னளென் றுரையே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.

துறை: அறியாள்போன்று நினைவுகேட்டல்.

     (இ-ம்.) இதனை “நாற்றமும் தோற்றமும்” (தொல், களவி. 23) எனவரும் நூற்பாவின்கண், ‘குறையுறற்கெதிரிய.......................இரு நான்கு கிளவியும்’ என்பதன்கண் எஞ்சாது கிளந்த என்னும் மிகையால் அமைத்துக்கொள்க.

1-3: பற்றலர்........................வேலவ

     (இ-ள்) பற்றலர் தெறுதலும் உவந்தோர் பரித்தலும்-பகைவரை அழித்தலாலும் நண்பரைப் பாதுகாத்தலாலும் நிரலே; வெஞ்சுடர் என தண்மதி என-வெவ்விய ஞாயிறு போலும் குளிர்ந்த திங்கள் போலும்; புகழ் நிறீஇய-உலகத்தே புகழை நிலைநிறுத்திய; நெடுஇலைகுறும்புகர் குருதி வேலவ-நெடிய இலையினையும் சிறிய புள்ளிகளாய் அமைந்த குருதியினையுமுடைய வேற்படையினையுடையயோய் என்க.

     (வி-ம்.) பற்றலர்-பகைவர். தெறுதல்-அழித்தல். உவந்தோர்-நண்பர். பரித்தல்-பாதுகாத்தல். வெஞ்சுடர்-ஞாயிறு. தண்மதி-திங்கள். சுடரும் மதியும் எனல்வேண்டிய எண்ணும்மை தொக்கன. இது நிரனிறையுவமை. தறுதலானும் பரித்தலானும் என மூன்றனுருபு விரித்துக்கொள்க. தெறுதலால் வெஞ்சுடர் எனவும்