பக்கம் எண் :

மூலமும் உரையும்257



25
  மறையுகு நீர்க்குங் கருவுங் கரியும்
30
  வடிவ மெட்டினுண் மகிழ்ந்த வொன்றுஞ்
சேண்குள மலர்ந்த செந்தா மரையுஞ்
சோற்றுக்கடன் கழிக்கப் பெற்றுயிர் கழிக்கு
மாசைச் செருநர்க் கடைந்துசெல் வழியு
மருளும் பொருளு மாகித்
  திருவுல களிக்கும் பரிதிவா னவனே.

(உரை)
கைகோள்: களவு. நற்றாய் கூற்று

துறை:- சுடரோடிரத்தல்.

     (இ-ம்.) இதனை, “தன்னும் அவனும் அவளும் சுட்டி..................அவ்வழி யுரிய” (தொல். அகத். 36) எனவரும் நூற்பாவின்கண் ‘தெய்வம் நன்மைதீமை அச்சம் சார்தல் என்று அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ’ என்றதனால் அச்சம் காரணமாகத் தெய்வத்தை நோக்கிக் கூறியது என்க.

23-31: மலர்..........................வானவனே

     (இ-ள்) மலர்தலை உலகத்து இருள் எறி விளக்கும்-பரந்தவிடத்தையுடைய நிலவுலகத்தை மூடியுள்ள இருளை அகற்றும் விளக்கும் ஆகி; மன்உயிர் விழிக்க கண்ணிய கண்ணும்-அவ்வுலகத்தே நிலைபெற்றுள்ள உயிரினங்கள் விழித்துக் கொள்ளுதற்குக் காரனமாக கருதுகின்ற கண்ணும் ஆகி; மறைஉகு நீர்க்கு கருவும் கரியும்-மறையோர் சொரிகின்ற நீருக்குக் காரணமும் அவர் சொரியுங்கால் சான்றும் ஆகி; வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும்-இறைவனுடைய திருவடிவங்கள் எட்டனுள் வைத்து உயிரினங்கள் மகிழ்வதற்குக் காரணமான ஒருவடிவமும் ஆகி; சேண்குலம் மலர்ந்த செந்தாமரையும்-வானமாகிய நீர்நிலையின்கண் மலர்ந்த ஒரு செந்தாமரை மலர் ஆகியும்; சோற்றுக்கடன் கழிக்கப் போற்று உயிர் கழிக்கும் ஆசைச்செறுநர்க்கு-தம்மன்னன் வழங்கிய பெருஞ்சோற்றுத் திரளையை வாங்கியுண்ட கடனைத்தீர்த்தற்குப் போர்க்களத்தின்கண்ணே தம்மாற் போற்றப்படுகின்ற உயிரைக் கொடுக்கின்ற புகழின்கண் அவாவினையுடைய போர்மறவர்க்குத் தாம் இறந்துழி; அடைந்து செல்வழியும்-துறக்கம் அடைதற்குப் புகுந்து செல்லாநின்ற வழியும் ஆகி; அருளும் பொருளும் ஆகி; எவ்வுயிர்க்கண்ணும் பரந்துபட்டுச்செல்லும் பேரன்புமாகி அவ்வுயிரினங்கள் நுகரும் பொருள்களும் ஆகி; திருஉலகு அளிக்கும் கல்.-17