பக்கம் எண் :

258கல்லாடம்[செய்யுள்29]



பரிதி வானவனே-அழகிய உலகத்தினைப் பாதுகாத்தருளுகின்ற ஞாயிற்றுக்கடவுளே! என்க.

     (வி-ம்.) ஆகி என்பதனை, கண் முதலியவற்றோடும் ஒட்டுக. உயிர்களின் கண்கள் விழித்தற்குக் காரணமாய்க் கருதுகின்ற சிரந்த அண்ணும் ஆகி என்க. எனவே உயிரினங்களின் கண்ணுக்குக் கண்ணாகி என்றவாறாயிற்று. மறை; ஆகுபெயர். மறையோர் என்க. கரு-காரணம். மழைபெய்தற்கு ஞாயிறே காரணமாதல் பற்றி நீர்க்குக் கருவும் ஆகி என்றார். கரி-சான்று. மறையோர் உகுக்கும் நீருக்குக் கருவாதலோடு அவர் உகுக்காங்கால் கரியும் நீயேயாகி என்றவாறு. சேண்-உயரம். ஆகுபெயராய் வானத்தை உணர்த்தி நின்றது. சோற்றுக்கடன் கழிக்க உயிர்கொடுத்தல் அவிப்பலி என்னும் ஒரு மறத்துறை. இதனை,

கொளு “வெவ்வாள் அமருட் செஞ்சோ றல்லது
 உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று”
                 (புறப்பொருள்-மாலை. வாகைப்படலம். 30)

எனவும்,

“சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
 மறந்தரு வாளமர் என்னும்-பிறங்கழலுள்
 ஆருயிர் என்னும் அவிட்டோர் அங்கஃதால்
 வீரியரெய் தற்பால வீடு”
                     (புறப்பொருள்-மாலை. வாகைப்படலம். 30)

எனவும் வரும் வெண்பாமாலையான் உணர்க. இனி மறவர்க்கு மன்னர் சோறுவழங்குவதனை, கொளு:

“திருந்தார் தெம்முனை தெறுகுவார் இவரெனப்
 பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று”

எனவும்,

“உயவர் புகழ் எறிமுர சார்ப்பக்
 குயவரி வேங்கை யனைய-வயவர்
 பெறுமுறையாற் பிண்டங்கோள் ஏவினான் பேணார்
 இறுமுறையா லெண்ணி யிறை”          (புறப்பொ. வஞ்சிப். 23)

எனவும் வரும் வெண்பாமாலையான் உணர்க. போர்க்களத்தின்கண் மறச்சாவெய்திய மறவர் உயிர் ஞாயிற்றுமண்டிலத்தினூடே புகுந்து துறக்கம் எய்தும் என்பதுபற்றிச் செருநர்க்கு வழியும் ஆகி என்றார். உயிர்நீத்துப் புகழ் பெறுதலே அம்மறவர்க்கு விருப்பம் என்றார். ஆசைச்செருநர் என்றார். எல்லாவுயிரினங்களிடத்தும் பரந்துபட்டுச் செல்லும் ஒளியை அருளாக உருவகித்தார். பொருள்-உணவு முதலிய நுகர்பொருள். இவற்றின் தோற்றத்திற்கு ஞாயிறே காரணமாதல் பற்றி பொருளுமாகி என்றார். உலகு: ஆகுபெயர். உயிர்கள் என்க. பரிதி-ஞாயிறு. இப்பகுதியோடு,