பக்கம் எண் :

26கல்லாடம்[செய்யுள்1]



     (வி-ம்.) அருள் தேனுக்கும் அது நிரம்பிய சான்றோர்கள் தேனிறாலுக்கும் உவமைகள். மதி கிடக்கும்-மதிபோலக் கிடக்கும் உவம உருபு வருவித்தோதுக. இனி இறாலும் மதியும் கிடக்குமாம் எனினுமாம். அமைந்த கல்வி-அமைதற்குக் காரணமான கல்வி. அமைதல்-புலன்களிற் செல்லாது அடங்குதல். எழுமலை: தொகை. சூரனுடைய தம்பி ஒளித்த மலையைப் பொடித்த வேல்கள் இயைபு காண்க.

7 - 9: வள்ளி.........................பிறையோன்

     (இ-ள்) வள்ளிதுணைக் கேள்வன் வள்ளிநாய்ச்சியாருக்கு ஒப்பாகிய கணவனாகிய முருகவேள்; புள்ளுடன் மகிழ்ந்த-தன்னுடைய ஊர்தியாகிய மயிலோடும் கொடியாகிய சேவலோடும் மகிழ்ந்து வீற்றிருத்தற்கிடமான; கரங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த-ஒலிக்கின்ற கால்களையுடைய அருவிகளையுடைய திருப்பரங்குன்றத்தை ஒருபால் அணிந்துள்ள; பொன்நகர்கூடல்-பொன்னாலியன்ற மாடங்கலையுடைய நான்மாடக்கூடலாகிய மதுரையின்கண் எழுந்தருளிய; சென்னி அம்பிறையோன்-திருமுடியின்கண் அழகிய பிறையுடையோனும் என்க.

     (வி-ம்.) துணை-ஒப்பு.

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
 
(தொல். மெய்ப்பா - 25) 

என்பன. இவை பத்தும் வள்ளிக்கும் முருகவேளுக்கு ஒப்பாதல் கூர்ந்துணர்க. புள்-மயிலும் கோழிச்சேவலும். கறங்கு-முழங்குகின்ற. கால்-நீர்க்கால். இனி காலருவி வினைத்தொகையுமாம். நீர்காலும் அருவி என்க. உடுத்த-ஈண்டு அணிந்த என்பதுபட நின்றது. திருப்பரங்குன்றம் மதுரையோடு ஒட்டி அதற்கு அணிசெய்து நிற்றலின் பரங்குன்றுடுத்த கூடல் என்றார்.

10 - 14: பொதியப்..............................பெருமான்

     (இ-ள்) பொதியப் பொருப்பன்-பொதியமலையினை யுடைய பாண்டிய மன்னன்; மதி அக்கருத்தினை-தன் உள்ளத்தே கருதுகின்ற அந்தக் கருத்தினைத் தெரிவிக்கும் பொருட்டு; ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும். செந்தமிழ் கூறி-செவ்விய தமிழ்ப்பாவினை இயற்றிக் கொடுத்து, பொற்குவை அப்பாட்டிற்குப் பரிசிலாகிய பொற்குவியலை, தருமிக்கு-தருமி என்னும் அன்பனுக்கு அற்புடன் உதவி-அன்போடு வழங்கு