பக்கம் எண் :

மூலமும் உரையும்289



     (இ-ம்) இதற்கு “நாற்றமுந் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண், “அவன் விலங்குறினும்” எனவரும் விதி கொள்க.

1-5: வற்றிய.................................நின்றாட

     (இ-ள்) நெடுங்குரல் பேழ்வாய் குழிவிழி பிறழ்பல்-மிக்க ஒலியினையும் பெரிய வாயினையும் குழிந்த கண்ணினையும் நிரை ஒவ்வாப்பல்லினையும்; வற்றிய நரம்பின் தெற்றல் கருங்கால்-வற்றிய நரம்பினையும் ஒன்றனோடு ஒன்று தெற்றுதலையுடைய கரிய காலினையும்; தாளிப்போந்தின் தருமயிர்-தாளிப்பனையினது தலைவிரிந்தாற்போல விரிந்த மயிரினையுடைய; பெருந்தலை-பெரிய தலையினையும்; விண்புடைத்து அப்புறம் விளங்கு உடல்-விண்ணைமுட்டி அப்பாலும் விளங்குகின்ற உடலினையும் உடைய; குணங்கு இனம்-பேய்க்கூட்டங்கள்; கானம்பாடிச் சுற்றி நின்று ஆட-காட்டினைப் பாடிச் சூழ்ந்து நின்று கூத்தாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) குரல்-ஒலி. பேழ் வாய்-பெரிய வாய். தெற்றல்-ஒற்றனோடு ஒன்று தட்டுதல். தாளிப்போந்து-தாளிப்பனை என்னும் ஒருவகைப் புல். குணங்கு-பேய். கானம்-காடு.

6-7: சுழல்............................குனிப்ப

     (இ-ள்) சுழல்விழி சிறுநகை குடவயிறு இருகுழைச் சங்கம்-சுழல்கின்ற கண்களையும் சிறிய நகையினையும் குடம் போன்ற வயிற்றினையும் இரண்டு சங்கக் குழைகளையும்; குறுந்தாள்பாரிடம் குனிப்ப-குறிய கால்களையும் உடைய பூதங்கள் ஆடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) சுழல்விழி; வினைத்தொகை. சங்காலியன்ற குழை என்பது கருத்து. பாரிடம்-புதம். குனித்தல்-ஆடுதல்.

8: தேவர்..........................குழற

     (இ-ள்) தேவர்கண் பனிப்ப-தேவர்களெல்லோரும் இன்பக் கண்ணீர் சொரியாநிற்பவும்; முனிவர் வாய்குழற-இருடிகளெல்லோரும் மகிழ்ச்சி மிகுதியாலே வாய்குழறா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கண்: ஆகுபெயர். பனிப்பவெனச் சினைவினை முதலோடு முடிந்தது. குழறலும் அது.

9-10: கல்லவடத்திரள்................................ஏங்க

     (இ-ள்) கல்லவடத்திரள்-கல்லவடத்திரள் என்னும் இசைக் கருவியும்; மணிவாய் தண்ணுமை-அழகிய வாயினை கல்.-19