|
யுடைய தண்ணுமை என்னும்
இசைக்கருவியும்; மொந்தை-ஒருகட் பறையாகிய மொந்தை என்னும் இசைக்கருவியும்; கல்லலசு-கல்லலசு
என்னும் இசைக்கருவியும்; ஏங்க-முழங்கவும் என்க.
(வி-ம்.)
இவையெல்லாம் தோலாலியன்ற இசைக்கருவி. இவைகள் கருவியாயினும் கருத்தாவாய் நின்றன.
ஏங்குதல்: முழங்குதல்.
11-14:
கட்செவி...........................பொற்கொடி
(இ-ள்)
கட்செவி சுழல-தான் அணிந்துள்ள பாம்புகள் சுழலாநிற்பவும்; இதழி தாது உதிர்ப்ப-கொன்றைமாலை
பூந்துகளினை உதிர்ப்பவும்; பிறை அமுது உகுக்க-பிறைத் திங்கள் அமுதத்தைத் துளியா நிற்பவும்;
தாழ்சடை நெறிப்ப-தூங்குகின்ற சடை நிமிராநிற்பவும்; வெள்ளியம்பலத்துள்-வெள்ளியாலியன்ற
திருவம்பலத்தின்கண்; துள்ளிய பெருமான்-திருக்கூத்தாடிய சிவபெருமானுடைய; கூடல்மாநகர்
அன்ன பொற்கொடி-மதுரை மாநகரத்தை ஒத்த நலமுடைய காமவல்லிபோல்வாய் கேள்! என்க.
(வி-ம்.)
கட்செவி: அன்மொழித் தொகை. பாம்பு என்க. இகழி-கொன்றை. தாழ்சடை: வினைத்தொகை.
துள்ளுதல்-ஆடுதல். கூடல் நகர் நகர்க்குரிய சிரந்த பண்புகளெல்லாம் உடைத்தாதல்போல
மகளிர்க்கமைந்த மாண்பெல்லாம் உடையோய் என்பாள் கூடல் நகரன்ன பொற்கொடி என்றாள்.
பொற்கொடி: அன்மொழித்தொகையாய் விளியேற்று நின்றது. பேய்கள் சுற்றி நின்றாடவும்
பாரிட்சம் குனிப்பவும் தேவர்கள் பனிப்பவும் முனிவர்வாய் குழறவும் கல்லவடத்திரள்
முதலிய இசைக்கருவிகள் ஏங்கவும் பாம்பு முதலியன சுழலவும் நிமிரவும் உதிர்க்கவும் உகுக்கவும்
அம்பலத்துள் துள்ளிய பெருமான் என்க.
17-20:
வெண்முத்து...........................குடம்பையின்
(இ-ள்)
வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து கடைந்த செம்பவலத் தொத்து உடன்காட்டும்-வெள்ளிய
முத்துக்களைப்போல அரும்பிய பசிய பொற்றுகள் போலத் தாது தோன்ற மலர்ந்து மட்டம்
செய்யப்பட்ட செம்பவளத் திரள்போன்ற பூங்கொத்துக்களைஒருசேரக் காட்டாநின்ற; இரும்பு
கதவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைசினைமுகம் ஏந்திய-இரும்பு கிளைத்தாற்போன்ற கரிய
கிளையினையுடைய புன்னை மரத்தினது கிளைகளிடத்தே தம் அலகால் எடுத்த; இணர் கொள்வாய்க்
குடம்பையின்-பூங்கொத்துக்கலைக் கொண்ட வாயிலையுடைய தம்முடைய கூட்டினிடத்தே என்க.
(வி-ம்.)
புன்னையின் அரும்பிற்கு முத்தும், பூந்துகளுக்குப் பொற்றுகளும், புன்னையினது கரிய கொம்புகளுக்குக்
கவைத்த இரும்
|