பக்கம் எண் :

314கல்லாடம்[செய்யுள்38]



“காதல ரில்வழி மால கொலைகளத்
 தேதிலர் போல வரும்.”
(குறள். 1224)

எனவும் வரும் திருக்குறள்களையும் நோக்குக.

     இனி இச்செய்யுளோடு,

“பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
 நிறைநிலா நோய்கூர நெடுங்கணீ ருகுத்தனவே
 துறுமல ரவிழ்குழலாய் துறந்தார் நாட் டுளதாங்கொல்
 மறவையா யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை”
                                       (சிலப். கானல். 42)

எனவும்,

“பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளி னீழல்
 இருந்தேங்கி வாழ்வா ருயிர்ப்புறத்தாய் மாலை
 உயிர்புறத்தாய் நீயாகி லுள்ளாற்றா வேந்தன்
 எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை”
(சிலப். கானல். 49)

எனவும்வரும் சிலப்பதிகாரச் செய்யுள்களையும் ஒப்புக் காண்க. பாசறையிடத்தே என்னைப் பிரிந்து உறைகின்ற எம்பெருமானையும் நீ இங்ஙனம் சூழ்ந்திருப்பின் அவன் என்னை நினைந்து ஒருதலையாக மீள்வன். அவ்வழி நீ பெண்ணாகிய என்னை இறத்தலினின்றும் உய்யக் கொண்டதொரு நல்லறமும் உடையை ஆகுவை நீ அங்ஙனம் செய்யாது இப்பொழுது இவள் எளியள் அளியள் தமியள் பெண்ணென்றிரங்காது ஒரு பெண் கொலையே செய்யத் துணிந்தனை போலும். நீ மிகவும் பொல்லாய் என்றிகழ்வது குறிப்பென்க.

     இனி இடனை ‘மாலையே! நீ புகவும் தாழ்க்கொள்ளவும், அவிழவும், புகவும், விடவும், அணையவும், அடங்கவும், மறுப்பவும், விளைப்பவும், மலரவும் தீஒடு புக்கு என் உயிர் வளைந்த தோற்றம்போல வேந்தனுடைய பாசறையோரையும் வளைந்துள்ளனையோ அல்லையோ? ஓதுக! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.