பக்கம் எண் :

மூலமும் உரையும்313



என்பனவுமாம். இரண்டுருவமாவன: அம்மையும், அப்பனும் என்க. முதல் என்றது சிவலிங்கத் திருவுருவத்தை.

29-30: துறவால்..................................என்னவும்

     (இ-ள்) துறவால் அறனால் பெரல்இல் மாந்தர்-துறவறத்தாலாதல் இல்லரத்தினாலாதல் பிறவிப்பயனைப் பெறுதலில்லாத மாக்களினது; விள்ளா அறிவின் உள்ளமுமென்னவும்-விரிதலில்லாத அறிவினையுடைய நெஞ்சம் போலவும் என்க.

     (வி-ம்.) இருவகை அறநெறிகளில் நின்று ஒழுகிப் பிறவிப் பயனைப் பெறாத மாக்களினுடைய உள்ளம் அறியாமையால் பெரிதும் இருண்டு கிடத்தலின் உவமையாக்கினார். விள்ளல்-புடைபெயர்தல். எனவே விரிதல் என்றாயிற்று. துறவறமும் இல்லறமும் இரண்டும் அறமேயாயினும் சிறப்பு நோக்கிப் பொருள்களைத் துரத்தல் கருதித் துறவறத்தைத் துறவு என்றும் பொருள்களை வழங்குதல் கருதி இல்லறத்தை அறம் என்றும் கூறினார். என்னை? ஈதல் அறம் என்பவாகலின் என்க.

31-34: செக்கர்த்..............................ஓதுகவே

     (இ-ள்) செக்கர்த் தீயொடு புக்க நன்மாலை-செவ்வானமாகிய சுடு நெருப்போடே வந்த மிக்க மாலைக்காலமே!; என் உயிர் வளைந்த தோற்றம்போல-நீ இப்பொழுது என் உயிரைச் சூழ்ந்துகொண்டுள்ள காட்சியைப்போல; நால்படை வேந்தன் பாசறையோர்க்கும் உளையோ-நால்வகைப் படைகளையுமுடைய வேந்தனுடைய பாசறையின்கண்ணராகிய எம்பெருமானையும் இங்ஙனம் சூழ்ந்து கொண்டுள்ளனையோ? இலையோ; மனத்திறன் ஒதுக-உன் நெஞ்சத்திலுள்ள கருத்தினை எனக்குக் கூறுவாயாக என்க.

     (வி-ம்.) என் உயிரைச் சுட்டெரித்தற்கு நெருப்புங் கொணர்ந்துள்ளாய் என்பாள், செக்கர்த் தீயொடு புக்க நன்மாலை என்றாள். நன்மாலை என்றது ஈண்டு அதன் பண்பு மிகுதியை உணர்த்தி நின்றது. நல்ல பாம்பு என்றாற்போல என்க. இனி நன்மாலை என்றது இகழ்ச்சி எனினுமாம். மாலை: அண்மைவிளி. என் உயிரைப் போக்குதலே நின் கருத்தென்பாள் என் உயிர் வளைந்த தோற்றம்போல என்றாள்.

“மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
 வேலைநீ வாழிபொழுது”
(குறள். 1221)

எனவும்,

“பொருண்மாலை யாளரை யுள்ளி மருண் மாலை
 மாயுமென் மாயா வுயிர்”

(குறள். 1230)

எனவும்,