பக்கம் எண் :

312கல்லாடம்[செய்யுள்38]



பசுந்தாட்சேக்கொள் ஆம்பல் மலர என்புழிச் செய்யுளின்ப முணர்க. ஆம்பல்-அல்லி.

18-28: தோளும்..........................போலவும்

     (இ-ள்) தோளும் இசையும் கூறிடுங் கலையும் அருள் திரு எழுத்தும் பொருள்திரு மறையும்-தோள்களும், இசைகளும், சொல்லப்படுகின்ற கலைகளும், அருள் பெறுதற்குக் காரணமான அழகிய எழுத்துக்களும், மெய்ப்பொருளை யுணர்த்தும் சிறப்புடைய வேதங்களும்; விரும்பிய குணமும் அருந்திரு உருவும் முதல் எண்கிளவியும்-யாவரும் விரும்பிய குணங்களும், காண்டற்கரிய திருஉருவும், இவற்றின் முதலும் ஆகிய இவ்வெண்வகைப் பொருளும்; விதமுடன் நிரையே-வ்கையோடே நிரலே; எட்டும் ஏழும் சொற்றன ஆறும் ஐந்தும் நான்கும்-எட்டும், ஏழும், சொல்லப்பட்டனவாகிய ஆறும், ஐந்தும் நான்கும்; அணிதரும் மூன்றும் துஞ்சல்இல் இரண்டும் சொல்அரும் ஒன்றும்-அழகு தருகின்ற மூன்றும், அழிவில்லாத இரண்டும், சொல்லற்கரிய ஒன்றும் ஆக; ஆர்உயிர் வாழ அருள்வர நிறுத்திய-அரிய உயிரினங்கள் வாழ்தற் பொருட்டுத் திருவுள்ளத்தே அருள் தோன்றுகையாலே உலகத்தே நிறுத்திவைத்த; பேர் அருள் கூடல் பெரும்பதி நிறைந்த முக்கண் கடவுள் முதல்வனை-மிக்க அருளைப் பெறுதற்கிடனான நான்மாடக்கூடல் என்னும் மதுரையாகிய பெரிய நகரத்தின்கண் நிறைந்துள்ள மூன்று கண்களையுடைய சோமசுந்தரக்கடவுளாகிய முதற் கடவுளை; வணங்கார் தொக்க தீப்பெருவினை சூழ்ந்தன போலவும்-தொழாதவரைக்கூடிய கொடிய பெரிய வினைகள் சூழ்ந்துகொண்டாற் போலவும் என்க.

     (வி-ம்.) தோள், இசை, கலை, எழுத்து, மறை, குணம், உருவம், முதல் என்னும் இவ்வெண்கிளவியும் என்க. முதலும் எனல்வேண்டிய எண்ணும்மை தொக்கது. இவற்றை ஆருயிர் வாழும் பொருட்டும் அவர்க்கு அருள்வரும் பொருட்டும் இறைவன் தன்னையே எட்டுத் தோளுடையனாகவும், ஏழு இசைகளாகவும், ஆறு கலைகளாகவும், ஐந்து எழுத்துக்களாகவும், நான்கு மாறைகளாகவும், மூன்று குணங்களாகவும், இரண்டு உருவங்களாகவும், ஒரு முதலாகவும் மதுரையில் நிறுத்திவைத்தான் என்பது கருத்து. இவையெல்லாம் இறைவன் கொண்டுள்ள திருவருட்கோலங்கள் என்க. இசை ஏழாவன: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. ‘ஏழிசையும் இசைப்பயனும் ஆனான் கண்டாய்’ எனப் பெரியாரும் பணித்தருள்தல் காண்க. கலை-அறுவகைச் சாத்திரங்கள். அவை: சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் என்பன. ஐந்தெழுத்தாவன: ந, ம, சி, வ, ய, என்பன. நான்மறையாவன: இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன. மூன்று குணமாவன: ராசதம், சாத்வீகம், தாமதம் என்பன. இனி சத்து, சித்து, ஆனந்தம்