பக்கம் எண் :

மூலமும் உரையும்317



  கறங்கிசை யருவியஞ் சாரற்
புறம்பு தோன்றிநின் கண்ணா குவனே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன்கூற்று.

துறை: ஆடிடத்துய்த்தல்.

     (இ-ம்.) இதனை, “முன்னிலையாக்கல் சொல்வழிப்படுத்தல்.....இன்னவை நிகழும் என்மனார் புலவர்” (தொல். கள. 10) எனவரும் நூற்பாவின்கண் ‘இன்னவை’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1-4: முன்னி.........................ஆடுக

     (இ-ள்) முளரிநிறை செம்மகள்-செந்தாமரையில் எழுந்தருளியுள்ள செய்யமேனித் திருமகளை ஒப்போய்; முன்னி ஆடுக முன்னி ஆடுக-இனி நீ நின்னுடைய தோழியர் குழாத்திற் சென்று விளையாடுவாயாக வருந்தேல் இனி நீ சென்று நின் தோழியரோடு விளையாடுவாயாக; குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும்-குமுத மலரும், வள்ளைக்கொடியும், நீலமலரும், குமிழமலரும்; தாமரை ஒன்றில் தடைந்து வளர் செய்த செம்மகள்-ஒரு தாமரை மலரின்கண்ணே செறிந்து வளர்ந்தாலொத்த திருமுகத்தையுடைய செவ்விய நங்காய்; முன்னி ஆடுக-இனி நீ நின் தோழியருடன் சென்று விளையாடுவாயாக என்க.

     (வி-ம்.) வருந்தாதே சென்று விளையாடுவாய் என்பான் முன்னியாடுக முன்னியாடுக என மும்முறையும் அடுக்கினான். முளரிநிறை செம்மகள் என்றது திருமகளை. இனி குமுதமும்.....செய்த, செம்மகள் எனவும் இயைத்துக் கொள்க. இங்ஙனம் இயைத்து வளர் செய்தாலொத்த திருமுகத்தையுடைய செம்மகளே என உவமைக்கேற்பப் பொருளும் வருவித்தோதுக. குமுதம்-செவ்வல்லி. இது இதழுக்குவமை. வள்ளை-வள்ளைக் கொடி. இது செவிக்குவமை. நீலம்-கருங்குவளை. இது கண்களுக்குவமை. குமிழ்-குமிழ மலர். இது மூக்கிற்குவமை. தாமரை இது முகத்திற்குவமை. எனவே தலைவியின் திருமுகம் குமுதம் முதலியவற்றின் மலர் தன்னகத்தே செறிந்துள்ள ஒரு தாமரை மலர்போன்றிருந்தது எனத் தலைவியினது நயப்புணர்த்தியவாறாம். செம்மகள் என்பதுமது. செம்மகள்: அண்மை விளி.

6-9: பலகுறி...........................மேனியன்

     (இ-ள்) பலகுறி பெற்று இ உலகு அளித்த-தான் ஒருத்தியேயாகவும் பலவேறு பெயர்களையுடையளாய் இப்பேருலகத்தின்கண் வாழுகின்ற உயிர்க் கூட்டங்களைத் தோற்றுவித்துப் பாதுகாத்தருளிய; பஞ்சின் மெல் அடி பாவை கூறு