|
ஆகி-பஞ்சினும் காட்டில்
மென்மையையுடைய திருவடிகளையுடைய உமையம்மையாரைத் தன் பாகத்தே கொண்டு; கருங்குருவிக்குக்
கன் அருள் கொடுத்த-கீழ்ச் சாதியாகிய கரிக்குருவிக்கும் தனது கண்ணருளை வழங்கிய;
வெந்திரு நீற்றுச் செக்கர் மேனியன்-வெள்ளிய திருநீறு சண்ணத்த செவ்வானம் போன்ற
திருமேனியையுடையவனும் என்க.
(வி-ம்.)
பலகுறி-பல பெயர். சத்தியாகிய தான் ஒருத்தியே பலவேறு பெயர்களைப் பெற்று என்க.
சத்தி பலவேறு பெயர் பெற்று நிற்கும் என்பதனை,
சத்திதான்
பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக
வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம் (சித்தி. 81)
|
எனவும்,
சத்திதன் வடிவே
தென்னில் தடையிலா ஞானமாகும்
உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
வைத்தலான் மறைப்பில் ஞானல் மருவிடுங் கிரியை யெல்லாம் (சித்தி.
82) |
எனவரும் சிவஞான சித்தியாராலும்
உணர்க. உயிரளித்தலாவது உயிர்களுக்குப் புத்தி முத்திகளை அருளுதல் என்க. இனி, கருங்குவிக்கும்
எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கருங்குருவி-கரிக்குருவி.
கரிக்குருவிக்கு அருள் செய்தமையைத் திருவிளையாடற் புராணத்தே (47) கரிக்குருவிக்குபதேசஞ்
செய்த படலத்தால் உணர்க. செக்கர்-செவ்வானம்.
10-17:
கிடையில்..........................போல
(இ-ள்)
கிடையில் தாபதர் தொடைமற முழக்கும்-தமது பள்ளியின்கண் துறவோர் ஓதுகின்ற தொடையோடுங்
கூடிய மறைமுழக்கமும்; பொங்கர் கிடந்த சூலையுடைய முகில்களின் முழக்கமும்; வல்லியைப்
பரியும் பகடுவிடு குரலும்-கால் விலங்கினை முறிக்கும் களிற்றியானைகள் பிளிறும் முழக்கமும்;
யாணர் கொடிஞ்சி நெடுந்தேர் இசைப்பும்-அழகிய கொடிஞ்சியினையுடைய நெடிய தேர்களின்
முழக்கமும்; ஒன்றி அழுங்க-ஒருங்கு கூடி ஆரவாரித்தலாலே; நின்றநிலை பெருகி-அவ்வொலிகள்
தாம் நின்ற நிலையினின்றும் பெருகி; மாதிரக் களிற்றினை செவிடு உறக் கொடுக்கும்-திசை
யானைகளைச் செவிடுபடும்படி செய்யும்; புண்ணியக் கூடலுள்-புண்ணியத்தைத்
|