பக்கம் எண் :

322கல்லாடம்[செய்யுள்40]



25
  மங்குனிறை பூத்த மணியுடுக் கணமெனப்
புன்னையம் பொதும்பர்ப் பூநிறை கூடனும்
பொன்னடி வருத்தியுங் கூடி
யன்னையர்க் குதவல் வேண்டுமிக் குறியே.

(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று.

துறை: விரதியர்க்குரைத்தல்.

     (இ-ம்.) இதனை, “எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே” (தொல். அகத். 42) எனவரும் நூற்பாவால் அமைத்துக்கொள்க.

     குறிப்பு: இக்கால்லாடச் செய்யுளுக்கு மேலெடுத்துக் காட்டியுள்ள திருக்கோவைச் செய்யுள் திணைவகையால் ஒத்தும் கூற்று வகையால் ஒவ்வாதும் இருத்தலுணர்க.

     இது தலைவனுடன் போகின்ற தலைவி எதிர்வந்த விரதியரை நோக்கி ‘நீயிர் எம்மூருக்குச் சென்று என்செலவினை எம்மன்னைமார்க்குக் கூறி அவரை ஆற்றுவிப்பீராக’ என்று வேண்டிக்கொண்டது என்க. இங்ஙனம் உடன்போக்கு நிகழ்வுழி, தலைவி எதிர்வருவோர்க்குக் கூறும் புலனெறி வழக்கினை,

கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
உஎற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே”           (ஐங்குறு. 385)

எனவரும் பிற சான்றோர் செய்யுளானும் உணர்க.

1-7: நிலவு...............................திருவினர்

     (இ-ள்) நிலவு பகல் கான்ற புண்ணிய அருள்பொடி-திங்களின் ஒளியையும் ஞாயிற்றின் ஒளியையும் வீசாநின்ற சிவபுண்ணியத்தைத் தருகின்ற திருவருளை யுடைய திருநீற்றினாலே; இருவினை துரந்த திருஉடல் மூழ்கி-நல்வினை தீவினைகளைத் துவர நீக்கிய திருமேனி மூடப்பெற்று; உடல் நடு வரிந்த கொடிக்காய் பத்தர்-உடலின் நடுவிற் கட்டிய கொடியிற் காய்க்கும் சுரைக்காயாகிய கமண்டலம்; சுத்தி அமர் நீறுடன்-சுத்தி என்னும் கருவியொடு கூடிய திருநீற்றுப்பையோடு; வலன்தோள் பூண்டு-வலத்தோளில் மாட்டி; முடங்குவீழ் அன்னவேணி முடிகட்டி-முடங்கிய விழுதுபோன்ற சடையை முடியாக் கட்டி; இருநான்கு குற்றம் அடிஅறக் காய்ந்து-ஞான