பக்கம் எண் :

326கல்லாடம்[செய்யுள்40]



யர்க்கு என்று பன்மை கூறினாள். பெரியோராகலின் கூறுதல் வேண்டும் என்னாது தன் பணிவுடைமை தோன்ற உதவல் வேண்டும் என்றாள்.

     இனி அருந்தவத்திருவினர் வட்டைவந்தனை என வழங்கும் மொழிநிற்க. இனி நீயிர் கூடல்சென்று எம்மன்னையர்க்கு நும்மகள் ஒரு காளைபின் ஊழால் செல்கின்றாள் என்றும், அவள் தானும், தாய் கால் தாழ்ந்தனள் என்றும், ஆயம் வினவினள் என்றும், பாங்கியைப் புல்லினள் என்றும், அயலும் சொற்றனள் என்றும், பறவைக்குப் பரிந்து மாழ்கினள் என்றும் கூறி அவர்க்கு இக் குறிகளை உதவல் வேண்டும் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு.பெருமிதம். பயன்-தாய் முதலியோரை ஆற்றுவித்தல்