பக்கம் எண் :

மூலமும் உரையும்325



புள்ளும் பிறவுமாம். இதனால் தலைவியின் பேரன்பு புலனாதல் உணர்க. இதனோடு,

“அன்னவள் கூறுவா ளரசர்க் கத்தையர்க்
கென்னுடை வணக்கமுன் னியம்பி யானுடைப்
பொன்னிறப் பூவையுங் கிளியும் போற்றுகென்
றுன்னுமென் றங்கையர்க் குணர்த்து வாயென்றாள்”.
                               (கம்ப. அயோத். தைலமா. 40)

எனவரும் இராமாவதாரத்தையும் ஒப்பு நோக்குக.

19-21: தழல்...........................மிடற்றோன்

     (இ-ள்) தழல்விழி பேழ்வாய் தரக்கின்-கனல்கின்ற கண்களையும் பெரிய வாயினையுமுடைய புலியினது; துளிமுலை-பால் துளிக்கும் முலையின்கண்; பைங்கண் புல்வாய் பால் உணக்கண்ட-பசிய கண்களையுடைய மான்கன்று பால் உண்ணும்படி அருளாட்சி செய்தருளிய; அருள்நின்ற பெருமான்-அருளே நிறைந்த எம்பெருமானாகிய; இருள்நிறை மிடற்றோன்-இருள் மலிந்த மிடற்றினையுடைய சோமசுந்தரக்கடவுளினது என்க.

     (வி-ம்.) செங்கோன்மையின் சிறப்புணர்த்துவாள் புலி முலையினை மான்கன்று உண்ணக் கண்ட என்றாள்.

“பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
 ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்”
                                  (கம்ப. க. குலமுறை. 5)

எனப் பிற சான்றோரும் ஓதுதல் உணர்க. தரக்கு-புலி.

22-25: மங்குல்...........................குறியே

     (இ-ள்) மங்குல் நிறை பூத்த மணி உடுக்கணம் என-விசும்பிடமெல்லாம் நிறையப்பூத்துள்ள அழகிய விண்மீன் கூட்டம்போல; புன்னை பொதும்பர் பூ நிறை கூடல்-புன்னை மரச் சோலைகளெங்கும் மலர்கள் நிறைந்துள்ள மதுரை நகரத்தின்கண்; நும்பொன் அடி வருந்தியும் கூடி-நுங்களுடைய திருவடிகள் நோகும்படியும் எம்பொருட்டாகச்சென்று சேர்ந்து; அன்னையர்க்கு இக்குறி உதவல் வேண்டும்-என்னை இழந்து ஆங்கு அலமந்திருக்கும் என் தாய்மார்களுக்கு யான் இங்குக் கூறிய இம்மொழிகளை அறிவுறுத்துதல் வேண்டும் என்க.

     (வி-ம்.) மிடற்றோனுடைய கூடல் என இயைக்க. மங்குல்-விசும்பு வின்மீன்கள் புன்னைமலர்களுக்குவமை. நியிர் ஆண்டுச் செல்லுதல் மிகையெனக்கொள்ளினும் என்பொருட்டு வருந்தியும் செல்லுதல் வேண்டும் என்பாள் நும் பொன்னடி வருந்தியும் கூடி என்றாள். தாய்மார் நற்றாய் செவிலித்தாய் எனப் பலராகலின் அன்னை