|
(வி-ம்.)
வெப்பந்தணியாத என்க. அழல்தாவி தேவர்கள் மயங்கித்தாழ்த்திப் புகுந்து இமையாது
பகுத்துண்டு உயிர் தாங்கும்படி செய்கின்ற இவ்வட்டை என்க. வட்டை-வழி. இவை விரதியர்
மொழியினைத் தலைவி கொண்டு கூறியபடியாம். ஒக்கல்-சுற்றத்தார். கொண்மூ-முகில்.
புனல்-ஈண்டு வானகங்கை. தரு-கற்பகம். அச்சத்தால் இமையாதிருந்தனர் எனவும் ஒருபொருள்
தோன்றுதலுணர்க. அமிழ்துண்டிலரெனின் இவ்வெப்பத்தால் அத்தேவரெல்லாம் இறந்தொழிதல்
ஒருதலை என்பார் மருந்து பகுத்துண்டு உயிர் தாங்கும் என்றார். இவ்வெப்பந் தாக்கியும்
போகாவுயிரென்பார் வல்லுயிர் என்றார்.
17-18:
பாடலம்............................செல்குநளென்று
(இ-ள்)
புது பாடலம் தார் காளைபின்-இன்றலர்ந்த பாதிரி மலர்மாலையணிந்த காளைப்பருவத்தையுடையான்
ஒரு நம்பியோடே; ஒன்றால் தள்ளாவிதியில் செல்குநள் என்று-யாதோருபாயத்தாலும் விலக்குதற்கியலாத
ஊழ்காரணமாக நும்மகள் செல்கின்றனள் என்றும் என்க.
(வி-ம்.)
தான் தேர்ந்து கொண்ட தலைவனுடைய மனவெழுச்சியையும் பருவத்தையும் பாராட்டுவாள் புதுப்பாடலந்தார்க்
காளை என்றாள். பாடலந்தார்-பாதிரிமலர்மாலை. ஒன்றால்-பிறிதோருபாயத்தால் எனினுமாம்.
ஊழிற்
பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் |
(குறள்.
380) |
என்பது பற்றி ஒன்றால்
தள்ள விதி என்றாள். இனி யாதொரு செயலாலும் மாற்றப்படாத கற்புடைமை காரணமாக எனினுமாம்.
14-16:
தாய்...............................மாழ்கினள்
(இ-ள்)
தாய் கால் தாழ்ந்தனள்-தாய்மார்களின் திருவடிகளை நினைந்து கைகூப்பித் தலைதாழ்த்துத்
திசைநோக்கி வனங்கினாள் என்றும்; ஆயம் வினவினள்-தன் தோழியர் குழாத்திலுள்ளாரை
நலமுசாவினள் என்றும்; பாங்கியைப் புல்லினள்-உசாத்துணைத் தோழியாகிய தமக்கையை
அன்பினாலே தழுவிக் கொண்டனள் என்றும்; அயலும் சொற்றனள்-ஏனையோர்க்கும் வணக்கம்
சொல்லினள் என்றும்; மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள்-தன் மகவாகக்கொண்டு
பேணி வளர்த்த கிளி முதலிய பறவைகளை நினைந்து இரங்கி மயங்கினள் என்றும் என்க.
(வி-ம்.)
தாய்-நற்றாய் முதலியோர். ஆயம்-தோழியர் குழு. பாங்கி என்றது செவிலி மகளாய் தனக்கு
மூத்த உசாத் துணைத் தோழியை. அயலும்-ஏனையோர்க்கும். மக்கட் பறவை: பண்புத்தொகை.
உவமத்தொகை எனினுமாம். அவை கிளியும் நாகணவாய்ப்
|