பக்கம் எண் :

330கல்லாடம்[செய்யுள்41]



உறுப்புக்களைக்கொண்டு; பொன்மலை பனிப்பினும் பனியா என் உயிர்-மேருமலை நடுங்கினும் நடுங்குறாத ஆற்றலுடைய என் உயிரை; புகர் முகம் புழை கை துயில்தரு கனவில்-புள்ளிகளையுடைய முகத்தினையும் துளையுள்ள கையினையு முடைய யானையானது துயிலும்பொழுது தோன்றுகின்ற கனவிடத்தே; முடங்கு உளைகண்ட பெருந்துயர்போல-வளைந்த பிடரி மயிரையுடைய சிங்கத்தைக்கண்டுழி உண்டாகுந் துன்பம் போன்ற பெரிய துன்பத்தைச் செய்து; வாட்டிய-வாடச்செய்த; தொடி இளங்கொடிக்கு-வளையலணிந்த இளங்கொடி போன்ற அந்நங்கைக்கு என்க.

     (வி-ம்.) தலைவியின் அவயவங்கள் தன் உயிரினும் நுழைந்து வருத்தும் என்பான் உயிரினும் நுனித்த அவ்வவ் வுருக்கொடு என்றான். வருத்தும் உருப்புக்கள் பலவாகலின் அவ்வவ்வுரு என்று அடுக்கினான். தன் ஆண்மையை விதந்தோந்துவான் பொன்மலை பனிப்பினும் பனியா என் உயிர் என்றான். பனித்தல்-நடுங்குதல். புழைக்கை-யானை.முடங்குளை-சிங்கம். இவை அன்மொழித் தொகை. யானை சிங்கத்தைக் கனவில் காணினும் மிகவும் துன்புறும். ஆதலின் தலைவியை நினைவிற்காணுமிடத்தும் தான்பெரிதும் துன்புறுதற்கு உவமையாக்கினான். தொடி-வளையல். இளங்கொடி: அன்மொழித்தொகை.

1-9: வீதி.......................பெருமான்

     (இ-ள்) விதி குத்திய குறுந்தாள் பாரிடம்-ஓடியாடுதல் புரிந்த குறிய கால்களையுடைய பூதங்கள்; விண்தலை உடைத்து பிறைவாய் வைப்ப-வானிடத்தைக் கிழித்து ஆங்குள்ள பிறைத்திங்களைத் தம் பல்லோடிணையாக வாயின்கண் வையாநிற்பவும்; குணங்கு இனம்துள்ள-பேய்க்கூட்டங்கள் மகிழ்ந்து கூத்தாடா நிற்பவும்; கூளியும் கொட்ப-கூளிகளும் சுழன்று ஆடா நிற்பவும்; மத்தி அந்தணன் வரம்சொலி விடுப்ப-மத்தியந்தணன் என்னும் முனிவன் வரம்பெறுமாறு அறிவித்து விடுத்தலால்; தில்லை கண்ட புலிக்கால் முனிவனும்-தில்லை என்னும் திருப்பதியினைக் கண்ட வியாக்கிரபாத முனிவனும்; சூயை கைவிட-அநசூயை என்னும் பார்ப்பனி தன் கையிலிருந்து நிலத்திலே விட்டமையால்; பதஞ்சலியாகிய ஆயிரம் பணஅடவி அருந்தவத்து ஒருவனும்-பதஞ்சலி முனிவனாகிய ஆடிரம்பட நிரையினையுடைய அரிய தவத்தையுடைய ஒருவனும் என்னும் இவ்விருவரும்; கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப-தம் கண்களாகிய வழிகளால் உட்கொண்டு தம் நெஞ்சமாகிய அறைகளிலே நிரப்பி வைக்கவும்; திருநடம் நவின்ற-காண்போர்க்கு வீட்டுச் செல்வத்தை நல்கும் இன்பக் கூத்தாடியருளிய; உலகு உயிர் பெருமான்-உலகிற்கும் உலகினண் வாழும் உயிர்கட்கும் உயிராகிய சிவபெருமானும் என்க.