பக்கம் எண் :

மூலமும் உரையும்337



     (வி-ம்.) ஆங்கு: அசை. குழை: ஆகுபெயர். அரி-செவ்வரி. மதர்கண், மலர்க்கண், அரிக்கண் எனத் தனித்தனி ஒட்டுக. கலைமான்: ஆகுபெயர்.

     இனி, இதனை, தோழி! என் உயிர்வாட்டிய இளங்கொடிக்கு வனமுலை திருவடி புகழுநர் செல்வம்போலப் பெருகி இருக்கும் நுசுப்பு அவன்கழல் பாடுநர் வினைபோலத் தேய்ந்திருக்கும்.அல்குல் அவன் அசைத்த மாசுணம் படத்தைப் பரப்பி வைத்தது போன்றிருக்கும். கண் அவன் ஏந்திய கலைமான் கண்ணை ஒக்கும் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை. கல்.-22